Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Anandi Ben Patel submits resignation to the Governor.

By   /  August 3, 2016  /  Comments Off on Anandi Ben Patel submits resignation to the Governor.

    Print       Email

201608031850295330_CM-of-Gujarat-Anandiben-Patel-submits-her-resignation-to-the_SECVPFஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா கடிதத்தை குஜராத் கவர்னரிடம் அளித்தார்.

குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்த ஆனந்தி பென் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்து இருந்தார். தனக்கு 75 வயது ஆக உள்ள நிலையில் அதனை காரணம் காட்டி இந்த முடிவினை எடுத்ததாக கூறினார்.

InCorpTaxAct
Suvidha

ராஜினாமா தொடர்பாக ஆனந்தி பென் பா.ஜ.க. தலைமைக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து இன்று காலை பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், வாஜ்பாய் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, ஆனந்தி பென்னின் ராஜினாமா மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மாலை 5 மணியளவில் முறைப்படி தனது ராஜினாமா மனுவை குஜராத் கவர்னர் கோலியிடம் ஆனந்தி பென் பட்டேல் வழங்கினார்.

இதனிடையே, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நாளை குஜராத் தலைநகர் காந்தி நகர் வந்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நிதின் கட்காரி மற்றும் சரோஜ் பாண்டே ஆகியோரும் இதற்காக கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ஆலோசனைகள் முடிவுற்ற பின்னர் வெள்ளிக்கிழமை அடுத்த முதல்வர் யார் என்பதும், எப்போது பொறுப்பேற்பார் என்பதும் தெரியவரும்.

குஜராத் பா.ஜ.க. தலைவர்களான நிதின் பட்டேல், விஜய் ரூபனி மற்றும் பூபேந்திரசிங் சுதசமா ஆகியோர் முதல்வருக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →