Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Anbalagan praises Stalin, says he will achieve what we have missed

By   /  March 2, 2016  /  Comments Off on Anbalagan praises Stalin, says he will achieve what we have missed

    Print       Email

‘எங்களால் செய்ய முடியாததை ஸ்டாலின் செய்வார்’ ஸ்டாலினுக்கு அன்பழகன் பாராட்டு.anbazhagab-900-01-e1453595282176

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் துறைமுகம் தங்க சாலை தெருவில் நடந்தது.

InCorpTaxAct
Suvidha

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:–

மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக மக்களுக்கு நன்மை செய்யும் காரியங்களில் ஈடுபடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். அதன்படி இந்த கூட்டம் நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டமாக நடத்தப்படுகிறது.

இது போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளை செய்வதில் பி.கே.சேகர்பாபு திறமையானவர். இந்த இயக்கத்தில் அவர் சேர்ந்ததில் இருந்து எவ்வளவோ பணிகளை செய்து விட்டார். அவரது செயல்கள் பாராட்டுக்குரியவை.

மு.க.ஸ்டாலின் பெரிய பாரம்பரியத்தின் அடுத்த தலைமுறையாக வளர்ந்து வருகிறார். நாங்கள் செய்ய முடியாததையெல்லாம் அவர் செய்வார். இந்த நாட்டை யார் ஆளக்கூடாதோ? அவர்களை ஆள விட்டது நாங்கள் செய்த தவறு.

அந்த தவறை திருத்தி ஆட்சியில் இருப்பவர்களை வெளியேற்றி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல்வாழ்வு அளிப்பார். இளமையிலேயே ஸ்டாலின் துணிச்சல் மிக்கவர். மிசா கொடுமைகளை தாங்கி சித்ரவதைகள் அனுபவித்தார் அந்த தியாகங்கள் மூலமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

தற்போது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.வை மக்கள் புரிந்து கொண்டு மனம் மாறி இருக்கிறார்கள். இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

தமிழக மக்கள் யார் என்ன சொன்னாலும் தாங்கிக் கொண்டு இருப்பவர்கள் அல்ல. நல்லாட்சி வர வேண்டும். தி.மு.க. ஆட்சி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரும். மு.க.ஸ்டாலின் எண்ணங்கள் வெற்றி பெறும்.

இவ்வாறு அன்பழகன் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →