Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Anbumani  and  Vijayakanth  will regret  for not joining BJP – says  Tamilisai

By   /  April 3, 2016  /  Comments Off on Anbumani  and  Vijayakanth  will regret  for not joining BJP – says  Tamilisai

    Print       Email

Tamilisaiபாஜகவுடன் சேராமல் போய்விட்டதற்காக அன்புமணியும் விஜயகாந்தும் வருத்தப்படப்போகிறார்கள்.- தமிழிசை பேச்சு.

பா.ஜனதாவின் தேர்தல் பிரசார பாடல் சி.டி. வெளியீட்டு விழா கோடம்பாக்கத்தில் நடந்தது. கட்சியின் இளைஞர் அணி பொது மேலாளர் வினோஜ்செல்வம் தயாரித்த இந்த சி.டி.யை அகில இந்திய செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.

InCorpTaxAct
Suvidha

நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை பேசியதாவது:–

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவில்லை. வேட்பாளர்கள் களம் இறக்கப்படவில்லை. அதற்குள் கள நிலவரத்தை ஆராய்ந்து வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்துக் கணிப்புகள் எப்படி உண்மையாக இருக்கும்? இந்த முடிவுகள் கேட்டு தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கி மிகப்பெரிய தாக்கத்தை பா.ஜனதா ஏற்படுத்தும்.

தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று செயலாற்றுபவர்கள் அன்புமணியும், விஜயகாந்தும். அந்த கடமை எங்களுக்கும் உள்ளது. எனவேதான் கடந்த தேர்தலில் மாற்றத்துக்கான கூட்டணியை உருவாக்கினோம். கணிசமான வாக்குகளையும் பெற்றோம்.

ஆனால் மாற்றம் வேண்டும் என்ற கடமையை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்காமல் அன்புமணி தனியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். இருவருமே பா.ஜனதா கூட்டணியில் சேராமல் தவறு செய்து விட்டோமே என்று மே மாதம் வருத்தப்படத்தான் போகிறார்கள்.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அந்த கூட்டணியில் காங்கிரசுக்கோ முழுமையான இடம் இருக்கிறதா? அல்லது இதயத்தில்தான் இடம் பெற போகிறார்களா என்பது தெரியவில்லை.

மக்கள் நலக்கூட்டணி என்பது குழப்பத்தின் மொத்த உருவமாக திகழ்கிறது. ஒரு தலைவர் பேசுவதில் இன்னொருவருக்கு உடன்பாடு இருப்பதில்லை. தனிநபரை முன்னிறுத்தக் கூடாது என்பது கம்யூனிசத்தின் கொள்கை. ஆனால் தனி நபர்தான் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு அதிருப்தி. விஜகாந்த் பிரசாரத்துக்கு வருவாரா, வரமாட்டாரா? என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கடுமையான கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள்.

இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த கட்சிகளுக்கிடையே பா.ஜனதாவால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்பட பல மாநிலங்களில் மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறோம்.

மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாக மோடி அரசு செயல்படுகிறது.

அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்பது மக்களின் கருத்து அல்ல. ஆனால் அப்படி ஒரு உணர்வை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

பா.ஜனதாவால் மாற்றத்தை தர முடியும் என்ற நம்பகத்தன்மை மக்களிடம் வந்துள்ளது. எனவே இந்த தேர்தலில் மாற்றம் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →