Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Anbumani  doesn’t  deserve  to  talk  about  corruption’- says  Kanimozhi.

By   /  March 20, 2016  /  Comments Off on ‘Anbumani  doesn’t  deserve  to  talk  about  corruption’- says  Kanimozhi.

    Print       Email

kanimozhi_0ஊழல் பற்றிப்பேச அன்புமணிக்குத் தகுதி இல்லை – கனிமொழி பேட்டி.

சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அன்புமணிக்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.  தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-

InCorpTaxAct
Suvidha

பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டிருக்கும் அன்புமணி ஊழலற்ற ஆட்சி தருவதாக கூறி வருகிறார். மத்தியில் அன்புமணி சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கை அன்புமணி எதிர்கொண்டு வருகிறார்.

இப்படிப்பட்டவர் எல்லாம் ஊழல் பற்றி பேசுகிறார். அவருக்கு எந்த உரிமையும் இல்லை. திராவிடக் கட்சிகள் பற்றியும் பேச உரிமை இல்லை.

மது விலக்கை அமல்படுத்து வதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இதற்கான மாற்று வருவாய் ஆதாரங்களை தி.மு.க. கண்டறிந்தே வைத்திருக்கிறது.

தமிழகத்தில் நிர்வாக முடக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால் மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் சரிந்து விட்டது. மேலும் தமிழக மக்களிடையே மாற்றத்துக்கான அலை வீசிக் கொண்டு இருக்கிறது. அது தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியே வருவது இல்லை. மக்களை சந்திப்பதும் இல்லை, அவரை டி.வி.யிலும், ஸ்டிக்கர், போட்டோக்களில் மட்டுமே காண முடிகிறது.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

முன்னதாக நெல்லை டவுண் தேரடி திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:- இந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. வேளாண்மை துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு தூண்டப்பட்டார்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுதலை செய்யப்பட்டார்.

திருச்செங்கோட்டில் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார்.  ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. நேர்மையான அதிகாரிகளை இந்த அரசு பணி செய்ய விடாமல் தடுக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். அப்போது முத்துக்குமார சாமி தற்கொலைக்கு நீதி கிடைக்கும்.

இந்த ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. பால் விலை, பஸ் கட்டணம், மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது.  முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. குறிப்பாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

குடிநீர்  கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் இருள் நீங்கி, சூரியன் மலர வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →