ரூ.10, 000 கோடிக்கு சில்லரையாக தாருங்கள்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை.
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து மக்களிடையே பணப்புழக்கம் குறைந்து விட்டது.
தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் வங்கிகள் முன்பு மக்கள் காத்து கிடக்கிறார்கள்.
இதனிடையே புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் புழகத்திற்கு வரவில்லை. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் கிடைக்கின்றது.
மேலும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் சில்லறை கிடைக்காமல் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு மக்கள் அல்லல்படுகிறார்கள்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சில்லரை வேண்டும் என்று மத்திய அரசிடம் ஆந்திர முதல்மந்திரி சந்திர பாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
மேலும் இணைய தள பணப் பரிமாற்றம் மற்றும் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பயன்படுத்துவோர்களுக்கு 80 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக ரிசர்வ வங்கி அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சந்திர பாபு நாயுடு தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.