பட வாய்ப்புகள் குறைந்தன நடிகை அஞ்சலி கவர்ச்சி நடனத்துக்கு மாறினார்
நடிகை அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவும் விளம்பர படங்களில் நடிக்கவும் தயாராகிறார்.
நடிகை அஞ்சலி 2007–ல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். ‘அங்காடி தெரு’ திருப்புமுனை படமாக அமைந்தது. எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்–2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். டைரக்டர்கள் பலர் தொடர்ந்து அவரை வற்புறுத்தியதால் சகலாகலா வல்லவன் படத்தில் விஷாலுடனும் மாப்ள சிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் இறைவி படம் வெளி வந்தது.
அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. தற்போது ஜெய் ஜோடியாக நடிக்கும் ஒரு படம் மட்டும் அவர் கைவசம் உள்ளது. தெலுங்கு வாய்ப்புகளும் நழுவி விட்டன. இதனால் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணமான குடும்பத்து பெண் தோற்றங்களில் விளம்பர படங்களில் தோன்றுகிறார். இயக்குனர்கள் யாரும் அணுகவில்லை.
படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் காட்சிகளில் நடிக்க அவர் முடிவு செய்து அதற்கான வாய்ப்பு தேடுகிறார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.