‘அரண்மனை என் தந்தையாரின் கதை. மற்றவர்கள் அதற்கு உரிமைக் கொண்டாட முடியாது’- சொல்கிறார் மதிஒளி சண்முகத்தின் மகன்.
சென்னையில் வசிக்கும் ஹேமந்த் குமார் பிரபல பத்திரிகையாளரும் இயக்குநருமான மதிஒளி சண்முகத்தின் மகன். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது; ‘இக்குநர் சுந்தர் சி யின் அரண்மனை-1 சினிமா படம் ஆயிரம் ஜென்மங்கள் என்ற கதையை வைத்து எடுக்கப்பட்டதாகவும். தற்போது அரண்மனை-2 படமும் வெளியாகியுள்ளது. ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் 1978ம் ஆண்டு வெளிவந்தது. எனது தந்தை மதிஒளி சண்முகம்தான் அந்தப் படத்தின் கதாசிரியர். அந்தப் படத்தின் கதையின் உரிமை எனது தந்தைக்குப் பிறகு எனக்கு சொந்தமானதாகும்.
தற்போது அந்தக் கதைக்கு சொந்தம் கொண்டாடி தயாரிப்பாளர் முத்துராமன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோர்ட்டும் முத்துராமனுக்குக் கதைக்கான தொகையைக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. உண்மையிலேயே கதைக்குத் தார்மிக உரிமைப் பெற்றுள்ள நானும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்றும் தனக்குக் கிடைக்கும் பணத்தில் உரிய பங்கைத் தருவதாகவும் தயாரிப்பாளர் முத்துராமன் என்னிடம் கூறியிருந்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி தற்போது முத்துராமனுக்கு முதல் கட்டமாக ரூ. 15 லட்சம் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 10 லட்சம் கிடைக்கவுள்ளது. ஆனால் முத்துராமன் எனக்குரிய பங்கைத் தர மறுக்கிறார். எனவே முத்துராமன் மீதும், அரண்மனை-1, மற்றும் அரண்மனை-2 படத்தில் இயக்குநர் சுந்தர் சி மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளேன்’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஹேமந்த் குமார். இந்த மனு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.