திருமாவளவனைக் கைது செய்து விசாரிக்கவேண்டும். பாஜக செயலாளர் எச்.ராஜா கூறுகிறார்.
பாரதீய ஜனதா அகில இந்திய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:–
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார்.
சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.
எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவஉணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள்.
அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலைசெய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசைதிருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார். எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.