Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Assets judges to comment about the case, what is the reason? Karunanidhi questioned

By   /  June 28, 2016  /  Comments Off on Assets judges to comment about the case, what is the reason? Karunanidhi questioned

    Print       Email

சொத்து குவிப்பு வழக்கு பற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவிக்க என்ன காரணம்? என்று கருணாநிதி கேள்வி 5164fd981f31fKARUNANIDHI_815002eஎழுப்பியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

InCorpTaxAct
Suvidha

ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, ‘‘பணபலமும், செல்வாக்கும் இருந்தால் எவரும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்து விடலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். அது தனக்கு உடன்பாடான கருத்து தான்’’ என்று கூறியிருக்கின்ற செய்தி ஒரு சில நாளேடுகளில் வெளிவந்துள்ளது.

14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மட்டுமன்றி, மேல் முறையீட்டு வழக்கையே 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு, உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நிகழ்வு, நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ‘‘எச்சரிக்கை’’ என்றே நான் கருதுகிறேன்.

இதேபோன்று, நிதானமின்றி காரை ஓட்டிச்சென்றதால் சாலையோரவாசி மரணமடைந்த வழக்கில், நடிகர் சல்மான்கானை விடுவித்ததும், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியது என்றும், குறிப்பாக 2 வழக்குகளிலும், ஓய்வுபெறும் நிலையில் இருந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதையும் சந்தோஷ் ஹெக்டே சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் 4 முதல் 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பணக்காரர்கள், செல்வாக்குமிக்கவர்கள் என்பதாலேயே ஜெயலலிதா, சல்மான்கான் ஆகிய இருவரின் மனுக்களும் அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டதாகவும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.

குறிப்பாக வழக்கத்திற்கு மாறான வகையில் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு, இவர்கள் என்ன தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களா? அல்லது பரீட்சை எழுத ஹால் டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்தவர்களா என்றும் நீதிபதி ஹெக்டே கேட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கத்தொடங்கி விட்டதாகவும், இதுபோன்ற வழக்குகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு திடீரென்று தெரிவிக்க என்ன காரணம்?.

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடும்போது, ‘‘விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கு உரிய காரணங்களை ஐகோர்ட்டு நீதிபதி குறிப்பிடவில்லை. ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால், ஊழலை ஒழிக்க கொண்டுவரப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கமே பயனற்றதாகிவிடும்.

அதேபோல, ஊழல் வழக்கில் இருந்து தப்பிவிடலாம் என்ற சமிக்ஞையை அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அளித்துவிடும்’’ என்று வாதிட்டபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘எங்களுக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஜெயலலிதாவை விடுதலை செய்து ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்யலாம்; இரண்டு, அந்த தீர்ப்பை ரத்துசெய்து, தண்டனையை உறுதி செய்யலாம்; வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்புவது அல்லது விசாரணை நீதிமன்ற தீர்ப்பு தவறு என தெரியவந்தால், அந்த தீர்ப்பை ரத்து செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடலாம்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்ப்பது குற்றமல்ல; சொத்துகள் சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத்தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே அது குற்றம் ஆகிறது’’ என்று இதுவரை இல்லாத புதுமையான கருத்து தெரிவித்ததால் தான் அதாவது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்ப்பது குற்றமல்ல என்றும்; அது குற்றம் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக அறிவித்ததால் தான் கர்நாடக நீதிபதி ஹெக்டே இவ்வாறு கருத்து தெரிவித்திருக்க கூடுமோ என்ற அய்யம் கூட நமக்கு ஏற்படுகின்றது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுரும், மற்றொரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவும் சொத்து குவிப்பு வழக்கு பற்றி இவ்வாறெல்லாம் கருத்து தெரிவிக்க என்ன காரணம், அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா என்று நமக்கெல்லாம் அய்யம் ஏற்படுவது நியாயம் தானே? மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைய போகிறது என்பதை இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்களும் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.  இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →