Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Azim Premji and Shiv Nadar in Forbes list of 100 richest tech billionaires

By   /  August 12, 2016  /  Comments Off on Azim Premji and Shiv Nadar in Forbes list of 100 richest tech billionaires

    Print       Email

shiv-nadar-azim-premji-pti-reuters-660ஐ.டி. துறை மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார்

போர்ப்ஸ் பத்திரிகையின் ஐ.டி. துறை கோடீஸ்வரர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் ஆகிய இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

அமெரிக்க வணிக பத்திரிகை போர்ப்ஸ், சர்வதேச அளவில் ஐ.டி. துறையைச் சேர்ந்த 100 கோடீஸ்வரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 7,800 கோடி டாலர் சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

அமேசான் நிறுவனத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பிசோஸ் 6,620 கோடி டாலர் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் 3-வது இடத்தில் உள்ளார். ஆரக்கிள் நிறுவனத் தலைவர் லாரீ எல்லிசன் நான்காவது இடத்தில் உள்ளார். சீன அலிபாபாவின் தலைவர் ஜேக் மா 2,580 கோடி டாலர் சொத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய நிறுவனமான விப்ரோவின் தலைவர் அசிம் பிரேம்ஜி 1,600 கோடி டாலர் நிகர சொத்துடன் 13-வது இடத்தில் இருக்கிறார். எச்.சி.எல். நிறுவன தலைவர் ஷிவ் நாடார் 1,160 கோடி டாலர் சொத்துடன் 17-வது இடத்தில் உள்ளார்.

அமெரிக்கா வாழ் இந்தியர்களான சிம்பொனி டெக்னாலஜிஸ் குழும தலைமை செயல் அதிகாரி ரொமேஷ் வாத்வானி மற்றும் சின்டெல் நிறுவன தலைவர் பாரத் தேசாய் மற்றும் அவரது மனைவி நீரஜா சேத்தி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 ஐ.டி. துறை கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 89,200 கோடி டாலராக உள்ளது. இது, சென்ற ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். இந்தப் பட்டியலில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதிலும் டாப் 10 கோடீஸ்வரர்களில் 8 பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் 19 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 13,270 கோடி டாலர் ஆகும். கனடாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஐந்து பேரும், ஜெர்மனியைச் சேர்ந்த நான்கு பேரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →