Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Bahubali will be screened at Cannes Film Festival

By   /  May 11, 2016  /  Comments Off on Bahubali will be screened at Cannes Film Festival

    Print       Email

bahubali-prabhasகேன்ஸ் படவிழாவுக்கு பாகுபலி திரைப்படம்.

இந்தியத் திரையுலகில் சாதனைப் படைத்த படம் பாகுபலி சர்வதேச மேடையில் அரங்கேற உள்ளது.

InCorpTaxAct
Suvidha

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் நடித்து தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான பாகுபலி படம் வசூலில் சாதனை படைத்ததுடன் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதையும் தட்டிச் சென்றது.

இப்போது பிரான்சில் இந்த மாதம் நடக்கும் சர்வதேசப் படவிழாவான கேன்ஸ் படவிழாவில் பங்கேற்கிறது. வருகிற 16ம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகுபலி கேன்ஸ் விழாவில் திரையிடப்படவிருக்கிறது.

இந்தப் படவிழாவில் கலந்துகொள்வதற்காக இந்தப் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான யார்லகட்டா ஆகியோர் பிரான்சுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். அதே நாள் மாலை 4 மணிக்கு பாகுபலி படக்குழுவினர் பங்கேற்கும் விவாதமேடை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை பாகுபலி அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்கள் நேரடியாகப் பார்க்கலாம்.

dc-Cover-20160126124825.Mediமேலும் பாகுபலி படமாக்கிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு டாகுமெண்டரியையும் ராஜமௌலி தயாரித்து வருகிறார். இதில் பாகுபலி படம் தயாரித்த விதம் பற்றி விளக்கப்படும் என்று தெரிகிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →