பாவனாவை கடத்தியவன் முன்னதாக நடிகை கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டு தோல்வி அடைந்தவன் திடுக்கிடும் தகவல்கள்
பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.
அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மீது அவனது பார்வை விழுந்தது. இவர் பழைய நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா 1980-களில் தமிழில் ராமாயி வயசுக்கு வந்துட்டா, சாவித்திரி, கண்ணாடி, ரஜினியுடன் நெற்றிக்கண், உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார்.
தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகையாக ‘இது என்ன மாயமோ’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா ஆகிய வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் அவரை கடத்தி பணம் பறிக்கலாம் என்று சுனில் திட்டமிட்டான். இதற்காக கீர்த்தி சரேஷின் கார் டிரைவருடன் சுனில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு தனது திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தான். அதற்கு அவனும் சம்மதித்தான்.
கீர்த்தி சுரேஷ் எப்போது தனியாக காரில் போவார் என்று டிரைவர் மூலம் நோட்டமிட்டான். செல்போனில் ‘ஒய்’ என தகவல் அனுப்பினால் இன்று கடத்தலாம் என்றும், ‘எக்ஸ்’ என்றால் இன்று கடத்து வதற்கான சூழ்நிலை இல்லை என்றும் ரகசிய வார்த் தைகளை பரிமாறிக் கொள் வது என முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அவசரத்தில் அந்த டிரைவர் ‘ஒய்’ என தவறுதலாக சுனிலுக்கு செல்போனில் தகவல் அனுப்பி விட்டான் உடனே சுனில் தனது கும்பலுடன் சென்று கீர்த்தி சுரேஷ் காரை மடக்கு நிறுத்தி உள்ளே ஏறி கடத்திச் சென்றான். ஆனால் அதன் பிறகு தான் காரில் இருந்தது கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா என தெரியவந்தது. அவரை கடத்தி பயன் இல்லை என்பதால் விட்டுவிட்டான்.
குடும்ப கவுரவம் கருதி இது பற்றி மேனகா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய வில்லை. தற்போது சுனில் பற்றிய தகவல்கள் வெளியானதும் அவன் தான் கீர்த்தி சுரேஷை கடத்த திட்டமிட்டவன் என்பதை மேனகாவின் கணவர் சுரேஷ்குமார் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர் தான் சுனில் பற்றிய தகவலை தனது நண்பர்கள் மூலம் வெளியிட்டுள்ளார்.
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த கார் டிரைவர் சுனிலை கேரள திரைப்பட துறையினர் பல்சர் சுனில் என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு திரை உலக பிரபலங்களுக்கு நன்கு பரிட்சயமானவன்.
மலையாள திரை உலகினருக்கு வெளியில் செல்ல டிரைவர்கள், கார்கள் தேவைப்பட்டால் சுனில் அனுப்பி வைப்பான். டிரைவர்களை வேலைக்கும் அனுப்பி வைப்பான், தற்காலிகமாக கார் ஓட்டவும் டிரைவர்களை அனுப்பி வைப்பான். மலையாள சினிமா துறையில் பல சங்கங்களில் உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தான். இதனால் அவன் மீது திரை உலகினருக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழ்ப் பட வாய்ப்புகள் குறைந்ததால் பாவனா தனது தாயாரோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு குடி பெயர்ந்தார். அங்கு அவரிடம் முதலில் தற்காலிக டிரைவராக சுனில் பணிபுரிந்தான். ஏற்றத் தாழ்வு பார்க்காமல் சகஜமாக பழகியதால் அவன் மீது பாவனாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு நிரந்தர டிரைவராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
பாவனா வீட்டுக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று வரக்கூடிய வகையில் சுனில் பழகினான். பாவனா மூலம் மற்ற நடிகைகளுடன் சுனில் பழகினான். சுனிலுக்கு அவர் முழு சுதந்திரம் அளித்தது தாயாருக்கு பிடிக்கவில்லை. அடிக்கடி மகளை எச்சரித்து வந்தார்.
ஒரு நாள் பாவனா இல்லாத சமயத்தில் அவரது படுக்கை அறைக்குள் சுனில் சென்று ரகசிய கேமரா வைத்தான். இதை தாயார் பார்த்து விட்டார். உடனே மகளிடம் சொல்லவே சுனிலை வேலையை விட்டு நிறுத்திவிட்டார் பாவனா.
அதன் பிறகு பிரபல தமிழ்நடிகையின் முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான ஒருவரிடம், சுனில் வேலைக்கு சேர்ந்தான். அங்கும் நடிகரின் தற்போதைய மனைவியான நடன நடிகையுடன் நெருங்கிப் பழகி அவரது வீட்டிலும் ரகசிய கேமரா வைத்த போது சுனில் மாட்டிக்கொண்டான். இதனால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டான்.இதனால் விரக்தி அடைந்த சுனில் தவறான பாதையில் சென்று தற்போது பாவனா கடத்தலில் சிக்கி தேடப்படும் குற்றவாளியாகி விட்டான்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.