Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Being adamant is my success formula: Kajal Agarwal

By   /  February 1, 2016  /  Comments Off on Being adamant is my success formula: Kajal Agarwal

    Print       Email

‘பிடிவாதமே என் வெற்றியின் ரகசியம்’- சொல்கிறார் காஜல் அகர்வால். kajal-agarwal-wallpaper-1

தற்போது காஜல் அகர்வால் தெலுங்கிலும் தமிழிலும் தயாராகிவரும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கவலை வேண்டாம் என்ற இன்னொரு படமும் இந்தியில் ஒரு படமும் கைவசம் உள்ளது. காஜல் அகர்வால் சமீபத்தில் நிருபர்களிடம் கூறியதாவது; “ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சவுகரியமாக இருக்கவே விருப்பப்படுவார்கள். அதனால் தன்னைப் பற்றியே சிந்திக்கவும் செய்வார்கள். ஆனால் நான் இவர்களிலிருந்து மாறுபடுகிறேன். எப்போதும் நான் என்னை விடவும் என்னைச் சுற்றி இருக்கும் விஷயங்கள் பற்றியே சிந்திக்கிறேன். மற்றவர்களைப் பற்றியே யோசிக்கிறேன். தேவையில்லாதவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறேன். இது எனக்குள் இருக்கிற மிகப்பெரிய பலவீனம் ஆகும்.

InCorpTaxAct
Suvidha

என்னைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியுமே நான் சிந்திக்கவேண்டும் என்று நான் நினைப்பது உண்டு. ஆனால் அப்படி இருக்கமுடியவில்லை.

நான் ஏதேனும் ஒன்றை அடைய நினைத்தால் அது நிறைவேறும்வரை விடமாட்டேன். ஆசைப் பட்டதை முடித்தபிறகுதான் அடுத்தது பற்றிச் சிந்திப்பேன். இப்படிப் பட்ட ஒரு பிடிவாத குணம் எனக்குள் இருக்கிறது. இந்த பிடிவாதம்தான் என்னை உயரத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. இதை என்னுடைய பெரிய பலமாக நினைக்கிறேன். நான் சினிமாவில் அறிமுகம் ஆனபோது நிறைய நல்ல கதைகள் வந்தன. ஆனால் மொழி தெரியாது. ஆனாலும் அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மொழி தெரியாவிட்டாலும் இந்தப் படங்களில் என்னால் நடிக்கமுடியும் என்ற பிடிவாதமான குணம் என்னிடம் இருந்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது. ஐயோ நம்மால் முடியாதே என்று மட்டும் நினைத்திருந்தேனானால் என்னால் இந்தப் படங்களில் நடித்திருக்க முடியாது.

பிடிவாதம் காரணமாகவே அவற்றில் நடித்து நான் முன்னுக்கு வந்தேன். தமிழ் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன்.

அவற்றின் மூலம் நிறைய தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய எதிர்கால சினிமா வாழ்க்கைக்கு இவை மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்” என்றார் காஜல்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →