ராம்தேவின் அடுத்த அவதாரம்; கால்பந்து விளையாடினார்.
பிரதமர் மோடியின் சுத்தமான இந்தியா மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய இரு திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டெல்லி நேரு மைதானத்தில் கால்பந்து போட்டி நடைப்பெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியும், பாலிவுட் நச்சத்திரங்கள் அணியும் மோதின.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிக்காக யோகா குரு ராம்தேவ் விளையாடினார். பாபா கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது. பிரபல இங்கிலாந்து கால்பந்து விரர் டேவிட் பெக்காமை போல் விளையாடவில்லை என்றாலும் ராம்தேவ் கால்பந்து விளையாடிய விதம், பார்வையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த போட்டியின் மூலம் கிடைத்த பணம் மேற்குறிப்பிட்ட இரண்டு திட்டங்களுக்கும் நன்கொடையாக அளிக்கப்பட்டது. ராம்தேவ் நன்கொடை வழங்கவில்லை. ஆனால், வீரர்களுக்கு தனது பதஞ்சலி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பானங்களை வழங்கினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.