Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Bengal child trafficking: Arrested BJP woman leader names ‘political personalities’

By   /  March 3, 2017  /  Comments Off on Bengal child trafficking: Arrested BJP woman leader names ‘political personalities’

    Print       Email

மேற்குவங்க மாநிலத்தில் குழந்தைகள் கடத்தலில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு: கைதான பாஜக பெண் jugi_choudry_3139605fதலைவர் போலீஸில் வாக்குமூலம்

மேற்குவங்க மாநிலத்தில் நடை பெற்ற குழந்தைகள் கடத்தலில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் கைதான பாஜக பெண் தலைவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து மாநில காவல் துறையின் சிஐடி பிரிவு அதிகாரி கூறியதாவது:

குழந்தைகள் கடத்தல் தொடர் பாக கைது செய்யப்பட்டுள்ள ஜூகி சவுத்ரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்த விவகாரத்தில் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அந்த நபர்கள் பற்றிய விவரங்களை இப்போதைக்கு கூற முடியாது.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யபட்டுள்ள சந்தான சக்கரவர்த்தி கூறிய தகவலுக்கும் ஜூகி சவுத்ரி கூறிய கருத்துக்கும் முரண்பாடு உள்ளது. எனவே, இருவரிடமும் ஒரே நேரத்திலும் தனித்தனியாகவும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் அடிக்கடி குழந்தைகள் காணாமல் போயின. இது தொடர்பான வழக்கில் சந்தான சக்கரவர்த்தி என்பவரை போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜல்பைகுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ஜூகி சவுத்ரிக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து ஜூகி தலைமறைவானார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜூகி சவுத்ரியை கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்திய நேபாள எல்லையில் போலீஸார் கைது செய்தனர். அவரை 12 நாள் சிஐடி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில பாஜக மகளிர் அணி செயலாளர் பதவியிலிருந்து ஜூகி நீக்கப்பட்டுள்ளார். எனினும் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் ஜுகி சவுத்ரியை பலிகடா ஆக்கியுள்ளனர் என்று மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →