Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Besides Salman Khan,  Delhi Now Appoints Bindra As One More Good Will Ambassador For Olympics.

By   /  April 30, 2016  /  Comments Off on Besides Salman Khan,  Delhi Now Appoints Bindra As One More Good Will Ambassador For Olympics.

    Print       Email

482042-salman-khan-ioa2சல்மான் கானைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் நல்லெண்ணத் தூதுவராக பிந்த்ரா நியமனம்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோ நகரில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் நல்லெண்ண தூதராக இந்தி நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

InCorpTaxAct
Suvidha

சல்மான்கான் நியமனத்துக்கு ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் தடகள வீரர் மில்காசிங், இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட பலர் இந்த நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் மற்றொரு நல்லெண்ண தூதராக ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் abhinav-bindra-medalபிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கும் அபினவ் பிந்த்ரா தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து அபினவ் பிந்த்ரா ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள கருத்தில், ‘இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோரிடம் இருந்து இந்திய அணியின் நல்லெண்ண தூதராக செயல்பட எனக்கு அழைப்பு விடுத்து இருந்த கடிதம் இன்று (நேற்று) பிற்பகலில் வந்து சேர்ந்தது. இந்த கவுரவத்துக்கு நான் தகுதியானவன் என்று அவர்கள் கருதி இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த பொறுப்பை பெருந்தன்மையுடனும், மரியாதையுடனும் ஏற்றுக்கொள்கிறேன். ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் கடிதம் எழுதி ஊக்கம் அளிப்பதுடன், எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஜூலை 15-ந் தேதி வரை இந்த பணிகளை செய்து விட்டு, பிறகு எனது போட்டியில் முழு கவனம் செலுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →