Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Best Actor Vijay Sethupathi: Hello FM’s ‘List 2017’ Awards

By   /  January 1, 2018  /  Comments Off on Best Actor Vijay Sethupathi: Hello FM’s ‘List 2017’ Awards

    Print       Email

சிறந்த நடிகர் விஜய் சேதுபதி: ஹலோ எப்.எம்.மின் ‘பட்டியல் 2017’ விருதுகள்

 

InCorpTaxAct
Suvidha

 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 2017–ம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தும் ‘பட்டியல் 2017’ நிகழ்ச்சி கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று வரை 3 நாட்கள் ஒலிபரப்பானது. பின்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலமாக ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி, முதல் முறையாக ஹலோ எப்.எம்.மில் டி.டி.வி. தினகரன் பேட்டி ஒலிபரப்பானது.

‘மூன்றாம் பார்வை’ நிகழ்ச்சியில், சிறந்த பாடலாக ‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற ‘யவ்வனா’ பாடல் தேர்வு செய்யப்பட்டு, இசையமைப்பாளர் சைமன் கே.கிங்கிற்கு இதற்கான விருதை இயக்குனர் சசி அறிவித்தார். மேலும், இந்த பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதை மூத்த பாடலாசிரியர் அறிவுமதி அறிவிக்க மதன்கார்க்கி பெற்றுக்கொண்டார்.

‘காற்று வெளியிடை’ படத்தில் இடம்பெற்ற ‘நல்லை அல்லை’ பாடலை பாடிய சத்யபிரகாசுக்கு சிறந்த பாடகருக்கான விருதை, பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் அறிவித்தார். ‘போகன்’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரா’ பாடலை பாடிய லட்சுமி சிவனேஸ்வரலிங்கத்திற்கு சிறந்த பாடகிக்கான விருதை, முன்னணி பாடகர் ஹரிசரண் அறிவித்தார்.

‘தாறுமாறு தர்பார்’ நிகழ்ச்சியில் சிறந்த நடிகராக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி தேர்வு செய்யப்பட்டார். அதற்கான விருதை நடிகர் பார்த்திபன் அறிவித்தார். ‘அருவி’ படத்திற்காக நடிகை அதிதி பாலனுக்கு, சிறந்த நடிகைக்கான விருதை நடிகை கவுதமி அறிவித்தார்.

சிறந்த படமாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜீ.வி.பிரகாஷ் அறிவித்தார். அதற்கான விருது இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை இயக்குனர் சேரன் அறிவிக்க, ‘அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, மாநகரம், கூட்டத்தில் ஒருத்தன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு பெற்றுக்கொண்டார்.

சிறந்த இ யக்குனராக ‘அருவி’ படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இயக்குனர் பிரியதர்‌ஷன் விருதை அறிவித்தார். ‘விக்ரம் வேதா’ படத்திற்கு சிறப்பான இசை அமைத்த சாம் சி.எஸ்.க்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதை இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்தார்.

சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் பணியாற்றிய சத்யன் சூரியனுக்கு பிரபல நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி அறிவித்தார். ‘விக்ரம் வேதா’ படத்தை சிறப்பாக தொகுத்த ரிச்சர்ட் கெவினுக்கு, சிறந்த எடிட்டருக்கான விருதை இயக்குனர்–ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் அறிவித்தார்.

சிறந்த கலை இயக்குனருக்கான விருதை கலை இயக்குனர் சாபு சிரில் அறிவிக்க ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்த முத்துராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த நடன இயக்குனருக்கான விருதை ‘மேயாத மான்’ படத்திற்கு நடனம் அமைத்த ஷெரீப்பிற்கு, நடன இயக்குனர் கலா மாஸ்டர் அறிவித்தார்.

எப்.எம். வானொலி வரலாற்றில் முதன்முறையாக ‘திரைப்பட விருதுகள்’ வழங்கும் விழா ஹலோ எப்.எம். 106.4–ல் பிரமாண்டமாக நடைபெற்றது.

 

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Prayer to protect from Corona Virus

Read More →