Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Big scandal in Karnataka : MLAs ask 10 crore as bribe for single vote in Rajya Sabha

By   /  June 4, 2016  /  Comments Off on Big scandal in Karnataka : MLAs ask 10 crore as bribe for single vote in Rajya Sabha

    Print       Email

201606040836439310_rajya-sabha-election-rs-10-crore-bribe-in-vote-Election_SECVPFஒற்றை ஓட்டிற்கு பத்துக் கோடி; ராஜ்யசபா தேர்தலுக்கு கர்நாடக எம்எல்ஏக்கள் பேரம்.

நாடு முழுவதும் டெல்லி மேல்-சபையில் காலியாக உள்ள 57 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள் தேர்வாகி விட்டனர். தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் 4 பேரும், தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

InCorpTaxAct
Suvidha

கர்நாடக மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 4 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஆனால் அந்த மாநிலத்தில் 5 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் அங்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், பா.ஜனதாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 4-வது எம்.பி. பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் சார்பில் முன்னாள் போலீஸ் அதிகாரி கே.சி. ராமமூர்த்தியும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் பிரபல தொழில் அதிபர் பி.எம்.பாரூக்கும் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் 4-வது எம்.பியை தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

224 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரசுக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 46, முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். டெல்லி மேல்-சபைக்கு ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய கர்நாடகத்தில் 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை.

அதன்படி பார்த்தால் காங்கிரஸ் வேட்பாளர்களான ஆஸ்கர் பெர்னாண்டசும், ஜெய்ராம் ரமேஷசும், பா.ஜனதாவின் நிர்மலா சீதாராமனும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. முதல் 2 வேட்பாளர்களுக்கு வாக்களித்தது போக, சபாநாயகர் நீங்கலாக காங்கிரசுக்கு 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

மீதமுள்ள ஒரு எம்.பி.யை தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவுவதால் சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 14 பேரின் ஆதரவைப் பெறுவதற்கு காங்கிரசும், மதச்சார்ப்பற்ற ஜனதா தளமும் வரிந்து கட்டி மோதுகின்றன.

இந்த நிலையில் பணம் வாங்கிக் கொண்டு எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டுப்போடுவதற்கு தயாராக இருப்பதை இந்தியா டுடே மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல்கள் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தின.

இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மல்லிகார்ஜூன் குபா மற்றும் ஜி.டி.தேவே கவுடா ஆகியோரும், கர்நாடகா ஜனதா பக்ஷா(கே.ஜே.பி.) கட்சியின் எம்.எல்.ஏ. பி.ஆர். பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ. வர்தூர் பிரகாஷூம் ஓட்டுப்போடுவதற்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசிய காட்சிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் வர்தூர் பிரகாஷ் எம்.எல்.ஏ. 3-வது காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்க சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் 5 எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி தன்னால் வெற்றி பெற வைக்க முடியும் என்று கூறியது பதிவாகி இருக்கிறது. அவர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ரூ.10 கோடி வரை பேரம் பேசும் காட்சியும் இடம் பெற்று உள்ளது.

ரகசியமாக படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகள் நேற்று முன்தினம் ஒளிபரப்பானது.

இதில் சம்பந்தப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்களும் வன்மையாக மறுத்தனர். பி.ஆர்.பட்டீல் எம்.எல்.ஏ. நேற்று விதான் சவுதா(சட்டசபை) வளாகம் முன்பாக சிறிது நேரம் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் எனக்கு இருக்கும் புகழை களங்கப்படுத்தி விட்டன. எனவே அவற்றின் மீது வழக்கு தொடருவது குறித்து வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றார்.

முன்னதாக முதல்-மந்திரி சித்த ராமய்யாவை சந்தித்த அவர் இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் நேற்று தேர்தல் கமிஷன் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. தலைமை தேர்தல் கமிஷனர் நஜிம் ஜைதி இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

அப்போது இது தொடர்பாக கர்நாடக மாநில தேர்தல் அதிகாரியை உடனடியாக அறிக்கை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டது.

இதுபற்றி தேர்தல் கமிஷன் அனில்குமார் ஜோதி நிருபர்களிடம் கூறுகையில், “ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பான விஷயங்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை உடனடியாக தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். அவருடைய உத்தரவு கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்அவரிடம் கர்நாடகாவில் டெல்லி மேல்-சபை தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ‘‘எங்களுக்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் தலைமை தேர்தல் கமிஷனரிடம் விஷயத்தை கொண்டு சென்று உள்ளோம். எனினும் வருகிற 11-ந்தேதி நடக்கும் டெல்லி மேல்-சபை தேர்தலை கர்நாடகாவில் ரத்து செய்யவோ அல்லது தள்ளி வைக்கவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’’ என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →