பாஜகவும் அதிமுகவும் ஒன்றுதான் – குஷ்பு பேச்சு.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி காஞ்சி சந்தை திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கொண்டு பேசியதாவது:-
விழாவில் பேசிய அவர், தாலிக்கு தங்கம் கொடுக்கிறார்கள். அதை டாஸ்மாக் வழியாக பறித்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட தங்கம் உங்களுக்கு தேவையா. செல்லும் இடங்களில் எல்லாம் ‘செய்வீர்களா’, ‘செய்வீர்களா’ என்று கேட்டார்களே, கடந்த 5 வருடத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்.வேலைவாய்ப்பை உருவாக்கினீர்களா?, சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கையானதல்ல. செயற்கையாக உருவாக்கப்பட்டது. அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் தேவை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தவறு செய்துவிட்டோம். இந்த தேர்தலிலும் அதே தவறை செய்து விடக்கூடாது.
நாட்டுக்காக ரத்தம் சிந்தியது காங்கிரஸ் மட்டும்தான். காங்கிரசை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய்மல்லையா வெளிநாடு செல்ல மத்திய அரசு உதவி செய்தது. ஆனால் டிராக்டர் கடன் வாங்கிய விவசாயி தாக்கப்படுகிறார்.
பாரதீய ஜனதாவும், அ.தி.மு.க.வும் ஒன்றுதான். இந்த தேர்தலில் பணம் கொடுப்பார்கள். அது உங்கள் பணம்தான். வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வந்தால்தான் நாட்டையும், பெண்களையும் காப்பாற்றமுடியும் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.