Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

BJP Can’t Form Alliance: May Go Alone

By   /  March 5, 2016  /  Comments Off on BJP Can’t Form Alliance: May Go Alone

    Print       Email

பாஜக தமிழகத் தேர்தலைத் தனியாகச் சந்திக்கும் ; கூட்டணி முயற்சிகள் தோல்வி.BJP-Logo-Photos

கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே தமிழகத்தில் ஒரு மாற்று அணியை அமைக்கும் முயற்சியை கடந்த பல மாதங்களாக பா.ஜனதா மேற்கொண்டது.

InCorpTaxAct
Suvidha

ஆனால் பா.ஜனதா அணியில் இடம் பெற்று இருந்த ம.தி.மு.க. விலகி சென்று விட்டது. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் ஒரு புதிய அணியை வைகோ உருவாக்கி விட்டார்.

பா.ம.க.வும் முதல்வர் போட்டிக்காக தனித்து களம் இறங்க தயாராகி விட்டது. விஜயகாந்தையாவது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியும் பலன் தருமா? தரதா? என்ற கேள்விக்குறியோடு நின்று பா.ஜனதா முழிக்கிறது.

பல மாநிலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து சாதித்தும் காட்டிய அமித்ஷா தமிழக அரசியல் சூழ்நிலைகளை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளார். கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனது ஏன்? என்று தமிழக தலைவர்களிடம் விவரம் கேட்டுள்ளார்.

அமித்ஷாவின் தூதுவராக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேரில் 2 முறை சந்தித்து பேசியும் விஜயகாந்த் தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் அமித்ஷாவும் மாத்தியோசிக்கும்படி தமிழக பா.ஜனதா தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணிக்காக இனியும் காலம் கடத்தாமல் தனித்து போட்டியிட தயராகும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் விருப்பமனு கொடுப்பதில் தொண்டர்கள் காட்டிய ஆர்வம் தமிழக பா.ஜனதா தலைவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. 234 தொகுதிகளிலும் போட்டியிட ‘சீட்’ கேட்டு விருப்ப மனுக்கள் வந்துள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் அடிப்படையில் கன்னியா குமரி, குளச்சல், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 7 தொகுதிகளில் பா.ஜனதா முதலிடத்தை பெற்றது.

மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கவுண்டம் பாளையம், சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலைப்பேட்டை, காங்கேயம், ராமநாதபுரம், விருதுநகர், மண்ணச்ச நல்லூர், முசிறி, விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 18 தொகுதிகளில் 2–வது இடத்தை பிடித்தது.

இந்த 25 தொகுதிகளையும் உள்ளடக்கி 50 தொகுதிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற பணியாற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.  மேலிட அறிவுரையின் படி தேர்தல் களத்தை சந்திப்பதற்கு தமிழக பா.ஜனதா தயாராகி வருகிறது.

கூட்டணி அமையா விட்டாலும் தொய்வின்றி தேர்தலை சந்திக்கப் போவதாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →