Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

BJP is ruling Tamil Nadu: Stalin.

By   /  September 13, 2017  /  Comments Off on BJP is ruling Tamil Nadu: Stalin.

    Print       Email

தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிதான் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

 

Suvidha
Biryani Pot

 

நீட் தேர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத மாணவி மரணம் தற்கொலையாக இருந்தாலும் அதை கொலையாகத்தான் கருதவேண்டும். அனிதா மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. திருச்சியில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம் நடத்தினோம். இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக மீண்டும் எந்த வகையில் போராட்டம் நடத்துவது என 2 நாளில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விரைவில் அறிவிக்க இருக்கிறோம். அது இரும்பு போராட்டமாக அமையும். மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும். நாட்டின் நலனுக்காகவும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவும் ஒன்று திரண்டு போராடி வருகிறோம்.

நீட் தேர்வு விலக்கு கோரி நாம் போராடினாலும் மத்திய மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை. இந்த போராட்டம் மட்டுமல்ல விவசாயிகள் போராட்டங்கள் நடைபெறுகிறது. ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.

தி.மு.க. நடத்தும் போராட்டம் அரசியலுக்காக அல்ல. ஆட்சியில் அமர்வதற்கும் இந்த போராட்டம் நடத்தவில்லை. மாணவரின் நலனுக்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு நடைபெற்றபோது மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ந்து எழுந்து போராட்டத்தில் குதித்தனர். பல தியாகங்களை செய்தனர். அதன் பலனாக 1965-ம் ஆண்டு அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளால் மீண்டும் போராட்டம் தலைதூக்கி உள்ளது. அதற்காக அறவழியில் போராடுகிறோம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஏன் உலகத்தையே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெற்றது. அதேபோல் இப்போது மாணவர்கள் போராடுகிறார்கள்.

நீட் தேர்வுமுறை மத்தியில் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான் கொண்டு வரப்பட்டது என்கிறார்கள். இதற்கு நான் பலமுறை பதில் சொல்லி விட்டேன். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கலைஞர் உடனே கடிதம் எழுதி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எனவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என தமிழிசைபோல் மாறி மாறி கூறமாட்டேன்.

தி.மு.க. கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வர துடிக்கவில்லை. நான் முதலமைச்சர் கனவுகாண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். கட்சிக்கு தலைவராக முடியாத செயல் தலைவர் எப்படி முதலமைச்சர் ஆக முடியும் என என்னைப் பார்த்து கேட்கிறார்.

நான் முதலமைச்சரை பார்த்து கேட்கிறேன். சூடு சொரணை இருந்தால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு கேள்வி கேளுங்கள் அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன். ஆனால் உங்களுக்கு அதற்கு துணிவில்லை, வக்கில்லை.

தமிழ்நாட்டில் இன்று மெஜாரிட்டி இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. கவர்னரிடம் சட்டசபையை கூட்டுமாறு வலியுறுத்திவிட்டோம். ஆனாலும் அவர் மவுனம் காக்கிறார். இதனால் ஜனாதிபதியை சந்தித்தும் முறையிட்டுள்ளோம் ஆனாலும் கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மும்பை சென்றுவிட்டார்.

இதனால் நாங்கள் நீதி மன்றத்தை நாடி இருக்கிறோம். ஜனநாயக அடிப்படையில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

தமிழகத்தில் இப்போது பா.ஜனதா ஆட்சி தான் நடைபெறுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள். மக்கள் பிரச்சனையை அவர்கள் தீர்க்கவில்லை. இதனால் மக்கள் கொதித்துள்ளனர். ஒன்றுதிரண்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள். அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Charter Global
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

TANA will not let criminals run our well earned reputation, Satish Vemana

Read More →