Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

BJP leader announces Rs: 1 lakh ‘Reward’ for Rahul Gandhi’s whereabouts

By   /  June 24, 2016  /  Comments Off on BJP leader announces Rs: 1 lakh ‘Reward’ for Rahul Gandhi’s whereabouts

    Print       Email

ராகுல் காந்தி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: பா.ஜனதா பிரமுகர் அறிவிப்புRahul-Gandhi

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஆண்டு 56 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார். அப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், குறுகிய கால வெளிநாட்டு பயணம் செல்வதாக கடந்த திங்கட்கிழமை அவர் அறிவித்தார். ஆனால், எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், இதை கேலி செய்யும்வகையில், மத்தியபிரதேச பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா, ராகுல் காந்தி எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தாலோ அல்லது அவரது இருப்பிடம் பற்றி தகவல் சொன்னாலோ அந்த நபருக்கு தனது சொந்த பணம் ரூ.1 லட்சத்தை பரிசாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த போட்டிக்கு ‘ராகுலின் முகவரியை சொல்லுங்கள், ரூ.1 லட்சம் பெறுங்கள்’ என்று அவர் தலைப்பு வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் ஆற்றல் அளவு குறைந்து விட்டதாக காங்கிரசார் கருதுகிறார்கள் போலும். ஆகவே, ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்ள அவர் வெளிநாடு சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார்? யாரை சந்தித்தார்? எத்தனை நாள் ‘சார்ஜ்’ ஏற்றிக்கொள்வார் என்பதை அறிந்து கொள்ள நாடு விரும்புகிறது’ என்றார்.

அதே சமயத்தில், ‘ராகுல் காந்தி கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் இருப்பவர் என்பதால், அந்த படைக்கு ராகுல் காந்தியின் இருப்பிடம் தெரியும். மேலும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கும் தெரியும். ஆகவே, அவருக்கு ரூ.1 லட்சம் கொடுத்து இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள்’ என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரவி சக்சேனா பதிலடி கொடுத்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →