Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

BJP levels corruption charges against Siddha Ramaiah , says ‘govt. contract work given to CM’S son.

By   /  April 15, 2016  /  Comments Off on BJP levels corruption charges against Siddha Ramaiah , says ‘govt. contract work given to CM’S son.

    Print       Email

அரசாங்க ஒப்பந்த தொழில் வழங்கியதாக சித்தராமய்யா மீது குற்றச்சாட்டு- பாஜக சுமத்துகிறது.Siddaramaiah_0

கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவின் மகன் யதிந்திரா டாக்டராக உள்ளார். இவர் மேட்ரிக்ஸ் இமேஜிங் சொலுசன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது ஆஸ்பத்திரிகளில் லேப், ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் நிறுவனமாகும்.

InCorpTaxAct
Suvidha

கர்நாடகாவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் லேப் மற்றும் ஸ்கேன் வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக டெண்டர் முறையில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் முதல்–மந்திரி மகன் நடத்தும் மேட்ரிக்ஸ் இமேஜிங் சொலுசன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஒதுக்கப்பட்டது. வேலைகளும் நடந்தன.

இதில் ஊழல் நடந்திருப்பதாக பா. ஜனதா குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா கூறியதாவது:–

முதல்–அமைச்சரோ, அமைச்சரோ தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு காண்டிராக்ட் பணிகளை ஒதுக்க கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால், அதை மீறி சித்தராமையா பணிகளை வழங்கி உள்ளார். இதில் ஊழல் நடந்துள்ளது. எனவே இது சம்மந்தமாக உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது:–

என் மகனுக்கு காண்டிராக்ட் வழங்கியதில் எந்த தவறும் நடக்கவில்லை. எனது மகன் டாக்டருக்கு படித்தவர். அவருடைய நண்பர்கள் நடத்தும் நிறுவனத்துக்குதான் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் எனது மகனும் டைரக்டராக இருக்கிறார். எனக்கு முன்பு இருந்த முதல்–அமைச்சர்கள் என்ன செய்தார்களோ, அதைத்தான் நானும் கடைபிடித்திருக்கிறேன்.

அந்த நிறுவனம் முறைப்படி டெண்டருக்கு விண்ணப்பித்து டெண்டர் இறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த தொகை டெண்டரில் கேட்டதால் பணியை வழங்கி இருக்கிறார்கள். இதில் எந்த விதிமீறலும் இல்லை. எல்லாமே வெளிப்படையாக நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →