‘‘பா.ஜனதா பொய்களையும், வதந்திகளையும் பரப்புகிறது’’ என்று சிவசேனா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
மகாராஷ்டிராவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே அண்மைக்காலமாக மனக்கசப்பு அதிகரித்து வருகிறது. சிவசேனா தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் சிவசேனா கூறியிருப்பதாவது:-
இன்றைய நாட்களில் அரசியல் இருள்படர்ந்துவிட்டது. விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், டெல்லி முதல் மராட்டியம் வரை உண்மையை பேச முயற்சிப்பவர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது. சிவசேனாவுக்கு சவால் விட முயற்சிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஆடைகள் மீது தீ வைக்கும் வழியில் பயணிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இதுபோன்றவர்கள் வதந்திகளுக்கு என்றே தனி பஜார் ஆரம்பித்து, கனவுகளை அங்கே விற்பனை செய்கிறார்கள். வதந்திகளை பரப்புவதும் ஒரு விதத்தில் குற்றம் தான். அவர்களது (பா.ஜனதா) அரசியல் பொய்களையும், வதந்திகளையும் பரப்புவதை சார்ந்திருக்கிறது.சிவசேனாவுக்கு எதிராக தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டால், மோடி அறிவித்த ‘ஸ்மார்ட்’ நகரங்கள் ஒவ்வொன்றிலும் உங்களுக்காக 5 முதல் 10 மனநல மருத்துவமனைகள் கட்டுவோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.