’பசுக்களை கொல்பவர்களின் முட்டிகளை உடைப்போம்’ – பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையை பிடித்த பா.ஜ.க சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்மந்திரியாக பதவி வகித்து வருகிறார். ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே மாநிலத்தில் உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடுவதற்கு உத்தரவிட்ட அவர், இறைச்சி வெட்டுவதற்கும் தடை விதித்தார்.
மாநில அரசின் இந்த முடிவு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ விக்ரம் சாய்னி நேற்று பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ,” பசுக்களை அவமரியாதை செய்பவர்கள், கொல்பவர்கள் ஆகியோரின் கை,கால் முட்டிகளை உடைக்க நான் வாக்குறுதி அளிக்கிறேன்.” என சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.
விக்ரம் சாய்னி ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டில் நடந்த முசாபர்நபர் கலவரத்தின் போது கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.