Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

BJP publication in Maharashtra dares Shiva Sena to take “divorce”

By   /  June 24, 2016  /  Comments Off on BJP publication in Maharashtra dares Shiva Sena to take “divorce”

    Print       Email

bjp-shivsena-53e24bcccfaf5_exlstமராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கருத்து வேறுபாடு அதிகரிப்பு

‘மத்தியிலும், மராட்டியத்திலும் அதிகாரத்தில் உள்ள பா.ஜனதா தலைமையிலான ஆட்சி, நிஜாம்களின் ஆட்சியை விட மோசமானது’’ என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி., சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

InCorpTaxAct
Suvidha

இது தொடர்பாக அக்கட்சியின் வாராந்திர இதழான ‘மனோகட்’டில் ‘நீங்கள் எப்போது விலக போகிறீர்கள்?’ என்கிற தலைப்பில், மராட்டிய பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி கட்டுரை எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

ஒரு பக்கம், நிஜாம்கள் அளிக்கும் பிரியாணியை அவர்கள் (சிவசேனா) சாப்பிடுகிறார்கள். மற்றொரு பக்கம் எங்களை விமர்சிக்கிறார்கள். இந்த நிஜாம்களுக்கு ஆதரவாக இருப்பதால் தான், மத்தியிலும், மாநிலத்திலும் மந்திரிகளை பெற்றுக் கொண்டு அதிகார சலுகைகளை சிவசேனா அனுபவிக்கிறது. எங்களையும் நிந்திக்கிறது. இது ‘நன்றிகெட்டத்தனம்’.

நிஜாம்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தால், ஆட்சியில் இருந்து ஏன் வெளியேற கூடாது? ஆட்சி பிடிக்கவில்லை என்றால், விலகிக் கொள்ளுங்கள்.

தங்களது பலம் குறைந்து வருகிறது என்கிற உண்மையை கிரகித்து கொள்ள சஞ்சய் ராவுத்துக்கும், சிவசேனா தலைவருக்கும் (உத்தவ் தாக்கரே) திராணி இல்லை. ஆகையால், மாறிவரும் அரசியல் சூழலை ஏற்றுக் கொள்ளுங்கள். எங்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள்.

சிவசேனாவுக்காக பா.ஜனதா ஏராளமான தியாகங்களை செய்துள்ளது. புனே, தானே மற்றும் குஹாகர் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா பலமுறை வெற்றி பெற்ற போதிலும், அந்த தொகுதிகளை சிவசேனாவுக்காக விட்டு கொடுத்திருக்கிறோம். பா.ஜனதாவை வலிமையான சக்தியாக வாக்காளர்கள் கருதுகிறார்கள். இது தான் சிவசேனாவை மிகவும் காயப்படுத்துகிறது.

இவ்வாறு அதில் மாதவ் பண்டாரி தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் வார இதழில், வெளியாகியுள்ள இந்த கட்டுரை பா.ஜனதா- சிவசேனா உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாதவ் பண்டாரியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நாகரிக எல்லையை சிவசேனா மீறிவிட்டது. ஆகையால், இப்போது அவர்களுக்கு நேரடியாக சொல்லிக் கொள்கிறோம். எங்களது பாதை மதிப்புமிக்கது என்பதை உணர மறுத்தால், உங்களது வழியில் பயணித்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →