Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

BJP Still Waiting For Vijayakanth

By   /  March 12, 2016  /  Comments Off on BJP Still Waiting For Vijayakanth

    Print       Email

தனித்துப்போட்டி அறிவிப்புக்குப் பிறகும் விஜயகாந்துக்காகக் காத்திருக்கிறது பாஜக.dc-Cover-r4hutjgaqhlbrvtisrmavtgui1-20160229052455.Medi

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பாஜக, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவ்விரு கட்சிகளுடன் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப் பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் பேசிவந்தார். இந்நிலையில் தனித்துப் போட்டி யிடுவதாக விஜயகாந்த் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்ததாக கூறப்படுகிறது.

InCorpTaxAct
Suvidha

ஏனெனில், விஜயகாந்த் அறிவிப் புக்கு சற்று முன்பாக ‘தி இந்து’ விடம் பேசிய ஜவடேகர், “தேமுதிக வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்றார்.

இது குறித்து ஜவடேகர் நேற்று ‘தி இந்து’விடம் கூறும்போது, “விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவ தாக கூறவில்லை. அவரது அறிவிப்பை கவனமாக பாருங்கள். எனவே இதன் மீது தற்போதைக்கு கருத்து கூற முடியாது. வேண்டு மானால் முடியாது என நான் கூறு வதையே எனது கருத்தாக நீங்கள் குறிப்பிடலாம். தமிழகத்தில் பாஜக சார்பில் பிரச்சாரம் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிப்போம்” என்றார்.

விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பை முற்றிலும் இழந்து விட்டதாக பாஜக கருதவில்லை என்றே தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருந்ததால் தமிழக தேர்தலில் தங்கள் தலைமையில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் போட்டியிட வேண்டும் என விஜய காந்த் கருதுவதாக ஜவடேகருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த வகையிலும் தேமுதிகவுடன் கூட்டணி பேசிப் பார்ப்பது என பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் கூறும்போது, “தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாள ராக விஜயகாந்த் தன்னை அறிவிக்க விரும்புகிறார். அவ்வாறு செய்தால் தவறான முன்னுதாரணம் ஏற்படும் என மறுத்தோம். என்றாலும் பாஜக தனித்து நின்றால் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறவோ அதன் மூலம் கட்சியை வளர்க்கவோ சாத்தியமில்லை. எனவே தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் எப்படியும் கூட்டணி வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் இக்கட்சிகள் எங்களை தவிர்க்காது என்று கருதுகிறோம்” என்றார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →