இன்னும் பத்து நாட்களில் பாஜக கூட்டணி பற்றி அறிவிப்போம் – இல.கணேசன்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
பாரதீய ஜனதா கட்சி தேர்தலுக்கான தயாரிப்புகளை தொடங்கி விட்டது. வாக்குச்சாவடி பகுதி அளவில் அமைப்பை பலப்படுத்துவதற்கான முயற்சியை மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டோம். எந்த கூட்டணி வந்தாலும் அடிப்படையாக பணி நடக்க போகிறது.
சட்டமன்ற தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம். 234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக மாநிலத்தில் 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு தலா ஒவ்வொருவருக்கும் தலா 24 தொகுதிகள் பிரித்து தரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் எங்களோடு கூட்டணியில் இல்லை என்று சொல்லவே இல்லை. சில கருத்துக்களை முன்வைத்தார்கள். அதை நாங்கள் குறித்து கொண்டோம். அந்த கருத்துக்களை எங்களது அகில பாரத தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் கொச்சிக்கு அகில பாரத தலைவர் அமித்ஷா வந்திருந்த போதும் இது குறித்து நாங்கள் கருத்து சொன்னோம். கூட்டணி குறித்து நாம் கவலைப்பட வேண்டாம் தமிழக பாரதீய ஜனதா கட்சி யாரோடு கூட்டணி அமைத்து போட்டி இடும் என்ற முடிவை மத்திய தலைமை விரைவில் அறிவிக்கும். 10 நாட்களுக்குள் அது தெரிய வரும்.
காங்கிரஸ், தி.மு.க. 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். நடுவில் ஒரு சில காரணங்களுக்காக பிளவு ஏற்பட்டது. மீண்டும் சேர்ந்திருக்கிறார்கள். பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் போது மகிழ்ச்சி ஏற்படுவது. சகஜம்தான் இப்போது சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் கொள்கை ரீதியான வேறுபாடுகள் இல்லை. இது இயற்கையானதுதான்.
பா.ஐ.க. பொருத்தவரையில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை யாருக்கும் தோன்றவில்லை. சுப்பிரமணியசுவாமி ஒரு கருத்தை சொன்னது விவாதத்தை கிளப்பியது என்பது உண்மைதான்.
இவ்வாறு அவர் பேசினார்
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.