Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Bluster no substitute for statistics: Arun Jaitley advice Rahul Gandhi

By   /  July 29, 2016  /  Comments Off on Bluster no substitute for statistics: Arun Jaitley advice Rahul Gandhi

    Print       Email

arun-jaitley_650x400_81469719658 விலைவாசி உயர்வு: ராகுல் காந்திக்கு அருண் ஜெட்லி பதிலடி

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.

InCorpTaxAct
Suvidha

விவாதத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி குறுக்கிட்டு, ராகுலுக்கு பதிலடி தருகிற வகையில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,“ பண வீக்கத்தை பொறுத்தமட்டில் நாட்டை மிக மோசமான நிலையில் காங்கிரஸ் கூட்டணி அரசு விட்டுச்சென்றது. ஆனால் தேர்தலில் போட்டியிடுகிறபோது எந்தவொரு வேட்பாளரும் நான் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பேன் என்று கூறுவது இயற்கைதான். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்க முடியாது” என கூறினார்.

அத்துடன், “எங்கள் அரசு பண வீக்கத்தை கட்டுப்படுத்தி உள்ளது. பருவமழை நன்றாக பெய்கிறபோது பணவீக்கத்தை இன்னும் குறைப்போம். பருப்பு வகைகளின் விலை உயர்வு கவலை அளிக்கிறது. தேவைக்கும், வினியோகத்துக்கும் உள்ள இடைவெளியை (பற்றாக்குறையை) குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” எனவும் அருண் ஜெட்லி சுட்டிக்காட்டினார்.

பருப்பு விலை உயர்வு குறித்து அவர் குறிப்பிடுகையில், “இந்தியா பருப்பு வகைகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. கூடுதலாக பயன்படுத்தவும் செய்கிறது. நாட்டின் பருப்பு தேவை 2 கோடியே 30 லட்சம் டன். உற்பத்தி 1 கோடியே 70 லட்சம் டன். இவ்விரண்டுக்கும் இடையேயான இடைவெளி 60 லட்சம் டன். இந்த பயிர் ஆண்டில் பருப்பு உற்பத்தி 2 கோடி டன் அளவுக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விலையை கட்டுக்குள் வைப்பதற்கு 20 லட்சம் டன் பருப்பு இருப்பு வைப்பதற்கு உணவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கிறது” என குறிப்பிட்டார்.

விலைவாசி என்றைக்கு குறையும் என தேதி நிர்ணயித்து சொல்லுமாறு பிரதமர் மோடியை ராகுல் கேட்டதை அருண் ஜெட்லி சாடினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “தேதிகள் தந்து கொண்டிருப்பதற்கு மாறாக பிரச்சினைகளுக்கு கொள்கைகளின் மூலம் தீர்வு காணப்படுகிறது. உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இரட்டை இலக்கு பணவீக்கத்தில் நாட்டை விட்டுச்சென்ற அரசைப்பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நாங்கள் ஒவ்வொரு துறையிலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். புள்ளி விவரங்களுக்கு காட்டு கூச்சல் மாற்று ஆகி விடாது” என்று கூறினார்.

“விலைவாசி உயர்வை ஊழல் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள்” என ராகுலுக்கு அருண் ஜெட்லி கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →