Loading...
You are here:  Home  >  World News  >  Asia News  >  Current Article

Bombing kills more than 80 in Baghdad.

By   /  July 3, 2016  /  Comments Off on Bombing kills more than 80 in Baghdad.

    Print       Email

04baghdad-master768பாக்தாத் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு 80  பேர் பலி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, மணி உள்ளிட்ட பொருட்களை வாங்க திரண்டிருந்த பாக்தாத் நகர கடைவீதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 75 பேர் உயிரிழந்தனர்.

InCorpTaxAct
Suvidha

பாக்தாத் நகரில் உள்ள கர்ராடா பகுதியில் உள்ள பிரபல கடைவீதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, மணிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான இதரப் பொருட்களை வாங்க இன்று காலை திரண்டிருந்தனர்.

அப்போது, மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 75-க்கும் அதிகமானோர் உடல் சிதறி, உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 130-க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →