Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Both  congress and BJP lure Vijayakanth.

By   /  February 10, 2016  /  Comments Off on Both  congress and BJP lure Vijayakanth.

    Print       Email

051காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளுமே விஜயகாந்துக்குத் தூண்டில்.

தி.மு.க.வை பொருத்தவரை தே.மு.தி.க.வை கண்டிப்பாக கூட்டணிக்குள் இணைத்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வை சேர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் தி.மு.க. மேலிடம் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தி.மு.க.வினரிடம் பிடி கொடுக்காததால் தே.மு.தி.க.வை அழைத்து வரும் பொறுப்பை காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சிகளிடமே தி.மு.க. ஒப்படைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

InCorpTaxAct
Suvidha

இதனால்தான் தி.மு.க. – தே.மு.தி.க. – காங்கிரஸ் கூட்டணி அமையுமா அல்லது தி.மு.க. – தே.மு.தி.க.– பா.ஜ.க. கூட்டணி அமையுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தி.மு.க.வின் இந்த யோசனைக்குப் பிறகே பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தி.மு.க. – தே.மு.தி.க. – பா.ஜ.க. கூட்டணியை உருவாக்குவதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டார்.

பாரதிய ஜனதாவின் இந்த முயற்சியை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தி.மு.க.வினருடன் ரகசியமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவது காங்கிரசா, பா.ஜ.க.வா என்ற பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க.வை முன் நிறுத்தி தி.மு.க.வை வளைத்து விடலாம் என்று பா.ஜ.க. வியூகம் வகுத்துள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில் அமித்ஷாவின் நடவடிக்கைகள் உள்ளன.

ஏற்கனவே டெல்லியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீசை சந்தித்து பேசிய அமித்ஷா, கூட்டணி பற்றி இறுதி செய்ததாக கூறப்படுகிறது.

அடுத்தக்கட்டமாக தி.மு.க. தலைவர்களை சந்தித்து பேச பா.ஜ.க. தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு வழி ஏற்படுத்தும் வகையில் வருகிற 17–ந்தேதி நடைபெற உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் மகன் சுகந்தன் திருமணம் அமைந்துள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்க பா.ஜ.க. தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியும், டாக்டர் தமிழிசை மகன் திருமணத்தில் கலந்து கொள்கிறார். அப்போது கருணாநிதி – அமித்ஷா இருவரையும் சந்தித்து பேச வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த சந்திப்பு நடக்கும் பட்சத்தில் தி.மு.க. – தே.மு.தி.க. – பா.ஜ.க. கூட்டணி உருவாக வாய்ப்பு பிரகாசமாகும் என்று தெரிகிறது.

பா.ஜ.க. தலைவர்களின் இந்த முயற்சியை அறிந்த காங்கிரஸ் கட்சி பதறிவிட்டது. இந்த நிலையில் திடீரென்று சென்னை வந்த பரூக் அப்துல்லா திமுக தலைவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். குலாம் நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியைச் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பரூக் அப்துல்லா முன்னறிவிப்பின்றி சென்னை வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிய ஜனதாவும், காங்கிரசும் தி.மு.க.வை நோக்கி படையெடுத்திருப்பது, தமிழக அரசியலில் இதுவரை இல்லாத போட்டியாகும். இந்த போட்டியில் பா.ஜ.க. வெற்றி பெறுமா? அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா? என்பது சஸ்பென்சாக உள்ளது.

தே.மு.தி.க.வின் முடிவைப் பொருத்தே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி – தோல்வி அமையும். விஜயகாந்த் தொடர்ந்து மவுனமாக இருப்பதால் காங்கிரசும், பா.ஜ.க.வும் முட்டி மோதி கொண்டிருக்கின்றன.

தே.மு.தி.க. மாநாடு 20–ந் தேதி காஞ்சிபுரம் அருகே நடைபெற உள்ளது. அதில் தொண்டர்களிடம் கருத்து கேட்ட பிறகு முடிவை அறிவிக்கப்போவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். எனவே கூட்டணி குழப்பங்களுக்கும் இழுபறிகளுக்கும் இந்த மாத இறுதியில் விடை கிடைக்க வாய்ப்புள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →