Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Both  DMK & ADMK Circulating False Survey Reports – Vaiko.

By   /  February 20, 2016  /  Comments Off on Both  DMK & ADMK Circulating False Survey Reports – Vaiko.

    Print       Email

திமுகவும் அதிமுகவும் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பொய்யான நச்சுக்கருத்துக்களைப் பரப்பி வருகிறார்கள் –வைகோ 377404-vaikoசொல்கிறார்.

மக்கள் நலகூட்டணியின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. எல்லா கூட்டங்களிலும் மக்கள் நலக்கூட்டணியின் நான்கு தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். கோவையில் நடைபெற்றக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது ;

InCorpTaxAct
Suvidha

மக்கள் நல கூட்டணி தொடங்கி 6 மாதங்கள் கடந்து விட்டது. குறைந்த பட்ச செயல்திட்டத்தினை முன்வைத்து மக்களை திரும்ப திரும்ப சந்தித்து வருகிறோம். நாங்கள் உள்ளத்தாலும், சிந்தனையாலும், பேச்சாலும், நடவடிக்கையாலும் ஒன்றாக இருக்கிறோம்.

மக்களை பாதிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து செயல்திட்டத்தினை தந்து இருக்கிறோம். இதை நடுநிலையாளர்களும், கட்சி சார்பற்றவர்களும் வரவேற்று உள்ளனர். தமிழகத்தை ஊழலில் இருந்து இப்போது மீட்கா விட்டால் இனிமேல் மீட்கவே முடியாது என கருதி இந்த கூட்டணியை பலரும் ஆதரித்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்.

தி.மு.க.வுக்கு பாதுகாப்பு அ.தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு பாதுகாப்பு தி.மு.க. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இவர்கள் மாறி மாறி ஆட்சி அமைப்பார்கள் என்பது தான் அவர்களது பலம். இந்த நிலையை மாற்ற வேண்டும். இந்த 2 கட்சிகளும் கொள்ளையடித்த பணத்தில் தொகுதிக்கு 5 கோடி, 6 கோடி செலவு செய்வார்கள். எனவே மக்கள் வாக்குசீட்டைமுறையாக பயன்படுத்த வேண்டும்.

ஊழலை ஒழிக்காவிட்டால் இளைஞர்களின் சிந்தனை வேறு பக்கம் போய் விடும் என பயப்படுகிறேன். தற்போது கருத்து கணிப்பு என்ற பெயரில் நச்சு ஆயுதத்தை திணிக்கிறார்கள். நடுநிலையாளர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்கிறார்கள். அந்த சூழ்ச்சி வலையை அறுத்து எறிவோம். அதற்காகத்தான் இந்த கூட்டங்கள்.

கடந்த ஆட்சி காலங்களில் கோவையில் 3 ஆயிரம் கோடியில் பல்கலைக்கழகம் வரும் என்றார்கள் ஏன் வரவில்லை. மெட்ரோ ரெயில் திட்டம் என்ன ஆச்சு? மேற்கு புறவழிச்சாலை திட்டம் ஏன் வரவில்லை. மக்களை பற்றி இரு கட்சிகளுக்கும் அக்கரை இல்லை.

கோரிக்கைகளை முன்வைத்து போராடிய அரசு ஊழியர்களை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. மது விலக்கை பற்றி சட்டசபையில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கெயில் திட்டத்தை எதிர்த்து போராடிய மக்களை போலீசை வைத்து தாக்கினார்கள். இதனால் கொங்கு மண்டலம் கொந்தளித்த பிறகு குழு அமைத்து கோர்ட்டுக்கு சென்றார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →