1 லிட்டர் தண்ணீரில் 500 கிலோ மீட்டர் ஓடும் மோட்டார் பைக். பிரேசில் நகரைச் சேர்ந்தவர் கண்டுபிடிப்பு.
ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லகூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக, வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது.
’டி பவர் ஹெச்20’ (T Power H20) என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ, இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் மாயாஜாலத்தை ரிக்கேர்டோ ஆஸேவெடோ ஆதாரப்பூர்வமாக நிகழ்த்தியும், நிரூபித்தும் காட்டியுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.