ஒலிம்பிக்கில் அரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷிக்கு வெண்கலப் பதக்கம். மாநிலப் பரிசான 2.5 கோடியையும் வெல்கிறார்.
58 கிலோ எடைபிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை டின்பெக்கோவாவை உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்சி மாலிக் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த வெற்றிக்காக குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் சாக்ஷிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை வேலரியா கோப்லோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
மல்யுத்த வீரங்கனை சாக்ஷி மாலிக் அரியான மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெண்கலம் வென்றதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.
ஒலிம்பிக்கில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் தங்கம் வென்றால் ரூ.6 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.4 கோடியும், வெண்கலத்துக்கு ரூ.2 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்ததது. மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அரியானாவை சேர்ந்த சாக்சி மாலிக்குக்கு ரூ.2.5 கோடி பரிசை அறியானா அரசு அறிவித்துள்ளது.
மேலும் அவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்கப்படுகிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.20 லட்சமும் பரிசு தொகை அறிவித்துள்ளது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.