2017க்கான் பட்ஜெட் தாக்கல்; தனிப்பட்ட முறையில் வருமானவரி செலுத்துவோருக்கு வரி 5 சதவிகிதமாகக் குறைப்பு.
பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று 2017-18-ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இது அருண் ஜெட்லியின் 4-வது மத்திய பட்ஜெட்டாகும்.
பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதிமந்திரி அருண் ஜெட்லி கூறிய முக்கியமான அம்சங்கள் பின்வருமாறு:-
‘‘உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இடத்தில் அரசு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016-ல் 36 சதவீதம் உயர்வு.
இளைஞர்கள் நலன், வேலை வாய்ப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அழைத்துள்ளார்கள். மின்னணு பணபரிவர்த்தனை மூலம் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பாளர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள். ஜன்தன், ஆதார், மொபைல் (J.A.M) அடிப்படையிலான பரிவர்த்தனையே இலக்கு.
உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது. உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இந்தியாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நிதிக்கொள்கைகளால் வளரும் நாடுகள் பாதிக்கும் ஆபத்து உள்ளது.
நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. கிராமப்புற வளர்ச்சியே முக்கியம். அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.
கருப்பு பணம், ஊழலற்ற பொருளாதாரத்தை உருவாக்க பட்ஜெட்டில் 10 அம்சங்கள் உள்ளன. உலக அளவிலான வளர்ச்சி விகிதம் 3.1% முதல் 3.4% வரை இருக்கும் என ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.75 % முதல் 7.5% வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் தொடரும்.
கிராமப்புறங்களுக்கு உள்கட்டமைப்புகளுக்கு அதிகம் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளோம். கிராமப்புறங்களின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாகும்.
தனிநபருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சம் முதல் 1 கோடி ரூபாயிலான வருவாய்க்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள வருமானத்திற்கு 15 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு தொடரும்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.