Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Bulandshahr: Depressed constable kills two cops, kills self

By   /  August 23, 2016  /  Comments Off on Bulandshahr: Depressed constable kills two cops, kills self

    Print       Email

gunசக போலீசார் இருவரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்

உத்தரபிரதேசம் புலந்த்ஷர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவுரவ் தியாகி(34). இவர் நேற்று இரவு சக போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

InCorpTaxAct
Suvidha

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உடனடியாக கான்ஸ்டபிள் சவுரவ் தியாகியும் தன்னைத் தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்திற்கான பின்னணி குறித்து தெளிவாக தெரியவில்லை என்று புலந்த்ஷர் மாவட்ட போலீஸ் செய்தி தொடர்பாளர் சோகெந்திரா சிங் கூறியுள்ளார்.

இருப்பினும் மன அழுத்தம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் தியாகி பணியில் இருந்த போது நடைபெற்றுள்ளது. கான்ஸ்டபிள் தியாகிக்கும் அவரது சக போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே வாய்த் தகராறு நடைபெற்றதன் விளைவாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →