அமெரிக்காவில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் படுகாயம் அடைந்டதுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீஸ் அதிகாரி ஜரோட் புர்குவான் கூறுனார். இதுகுறித்து புர்குவான் தெரிவித்ததாவது,
வடக்கு எச் தெருவில் உள்ள பார்க் தொடக்கப்பள்ளியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பள்ளியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சீல் வைத்தனர்.
மேலும் பார்க் தொடக்கப்பள்ளியில் இருந்த மாணவர்கள் அனைவரும், பாதுகாப்பாக அருகிலுள்ள கஜான் உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஹில்சைட் தொடக்கப்பள்ளி மற்றும் கஜான் உயர்நிலைப்பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்திருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.