Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Can Modi list out the works he did for people in the last 3 years? Challenge Akhilesh Yadav in election meeting.

By   /  March 4, 2017  /  Comments Off on Can Modi list out the works he did for people in the last 3 years? Challenge Akhilesh Yadav in election meeting.

    Print       Email

கடந்த மூன்று வருடங்களில் மக்களுக்காக மோடி என்ன செய்திருக்கிறார் என்பதைச் சொல்லத் தயாரா? தேர்தல் akhilesh-pti-story_647_022017124630பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் சவால்.

 

InCorpTaxAct
Suvidha

 

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. அன்று 73 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்று 6-வது கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு நடைபெற்றது. 8-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் 40 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. கடைசிகட்ட தேர்தல் என்பதால் மோடி, அகிலேஷ், ராகுல், மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் தனது கட்சி (சமாஜ்வாடி) உறுப்பினர்களை ஆதரித்து இன்று பாதோகி பகுதியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டேன். அந்தப் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எனது ஆட்சியில் நான் 10 பணிகளை செய்து இருக்கிறேன். அதுபோல நீங்கள் செய்த 10 பணிகளை (மோடி) உங்களால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா? எனது 5 வருட ஆட்சியில் நான் செய்த செயல்கள் குறித்த அறிக்கையை அளிக்க நான் தயாராக உள்ளேன். அதுபோல மத்தியில் நீங்கள் செய்த 3 வருட கால ஆட்சியின் அறிக்கையை உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?
இவ்வாறு அவர் பேசினார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →