Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Capital punishment in Bihar for those who manufacture and sell illicit liquor including toddy.

By   /  April 8, 2016  /  Comments Off on Capital punishment in Bihar for those who manufacture and sell illicit liquor including toddy.

    Print       Email

nitish-kumar-2பீகாரில் போலி கள் விற்பவருக்கும் மரண தண்டனை ; நிதிஷ்குமார் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் முதல்–மந்திரி நிதிஷ் குமார் முழு மதுவிலக்கை அமல்படுத்தி கடந்த 5–ந் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

InCorpTaxAct
Suvidha

ஆனால் அதில் கள் தயாரிப்பு, விற்பனை தொடர்பாக சில சந்தேகங்கள் எழுந்தன. அதை தெளிவுபடுத்தி மாநில அரசின் கலால் துறை உதவி கமிஷனர் ஓம்பிரகாஷ் மண்டல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘ போலி கள் தயாரித்து விற்பனை செய்து, அதை குடிப்போருக்கு மரணம் நேருகிறபோது குற்றவாளிக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதிக்கப்படும். பீகார் கலால் (திருத்தம்) சட்டம், 2016–ன் சில பிரிவுகள், கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடுகிற நபர்களுக்கும் பொருந்தும்’’ என கூறினார்.

மேலும், ‘‘பொது இடங்களில் வெளிநாட்டு மதுபானம், நாட்டுச்சாராயம் எடுத்துச்செல்கிறவர்களுக்கு சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அதே பிரிவின் கீழ்தான் கள் எடுத்துச்செல்கிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் அவர் கூறினார்.

அத்துடன், கலால் (திருத்தம்) சட்டத்தின்படி, கள் உற்பத்தி செய்கிறவர்கள், விற்பனை செய்கிறவர்கள், அருந்துகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →