“பேட்ஸ்மென்களின் மோசமான ஆட்டத்தால்தான் தோற்றோம்” கேப்டன் ரோஹித் சர்மா சொல்கிறார்.
9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பழிதீர்த்தது.
முதலில் ஆடிய மும்பை அணி, பஞ்சாப் அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களே எடுத்தது.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி வீரர் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தாலும், எங்களது பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மோசமாக இருந்தது. திட்டமிட்டபடி பேட்ஸ்மேன்கள் விளையாடவில்லை. 125 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவது என்பது எளிதான விஷயமல்ல. இந்த ஆடுகளத்தில் 140 ரன்கள் எடுத்தால் வெற்றிக்கு போதுமானதாக இருந்து இருக்கும். ஆடுகளத்தின் தன்மையை பஞ்சாப் அணியினர் சரியாக பயன்படுத்தி கொண்டார்கள். நாங்கள் சில முயற்சிகள் செய்து பார்த்தோம், அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை’ என்றார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.