Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Censor Board Chief welcomes High Court decision on Udtha Punjab.

By   /  June 14, 2016  /  Comments Off on Censor Board Chief welcomes High Court decision on Udtha Punjab.

    Print       Email

201606141607350273_Pahlaj-Nihalani-welcomes-HCs-decision-on-Udta-Punjab_SECVPFசென்சார் போர்டு பற்றிய ஐகோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். சென்சார் போர்டு தலைவர் ‘கிண்டலான வரவேற்பு’

இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் ‘உத்தா பஞ்சாப்’ படம் 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இதையொட்டி, ‘உத்தா பஞ்சாப்’ படத்தை தணிக்கை செய்த சினிமா தணிக்கை குழு, அதில் சில காட்சிகள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக கூறி நீக்கியது. மேலும், 13 இடங்களில் மாற்றம் செய்யுமாறு பரிந்துரை அளித்தது. அத்துடன் படத்தின் தலைப்பில் ‘பஞ்சாப்’ பெயர் இடம்பெறுவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

இதற்கு படக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டை அணுகினர். அப்போது, தணிக்கை குழுவுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை நீதிமன்றம் முன் வைத்தது படக்குழு.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. உத்தா பஞ்சாப் பட விவகாரம் தொடர்பான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

உத்தா பஞ்சாப் படத்தில் இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாட்டிற்கு எதிராக எதுவும் இல்லை.

திரைப்பட தணிக்கை வாரியம் சட்டத்தின் படியும், சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படியும் நடக்க வேண்டும். திரைப்படத்தின் கதையை முடிவு செய்ய வேண்டியவர்கள் இயக்குனர்கள் தான்.

திரைப்படத்தில் உள்ள காட்சிகளை துண்டிக்கவோ, நீக்கவோ, மாற்றவோ தணிக்கை வாரியத்திற்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை. சான்றிதழ் வழங்குவது தான் தணிக்கை வாரியத்தின் பணியே தவிர சென்சார் செய்வதல்ல.

அரசியலைமைப்பு சட்டம் மற்றும் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி தணிக்கை வாரியம் செயல்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உத்தா பஞ்சாப் திரைப்பட விவகாரத்தில் மும்பை ஐகோர்ட்டின் கருத்துக்கு தணிக்கை வாரிய தலைவர் பலஜ் நிஹலானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிஹலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோர்ட்டின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் இடத்திற்கு போகலாம்.

இது யாருடைய வெற்றி, தோல்வி பற்றிய விஷயம் அல்ல. திரைப்பட தணிக்கை துறையோ, வருமான வரித் துறையோ அல்லது மற்ற எந்த துறையாக இருந்தாலும் உத்தரவுக்கு எதிராக உயர் அதிகார மையத்தை மக்கள் அணுகலாம். இது தான்  ஜனநாயகம். மக்களுக்கு இந்த உரிமை கூட இல்லை என்றால், பிறகு எது வேண்டுமானாலும் நடக்கக் கூடும்.

நான் படம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோர்ட் கதைக்கான ஸ்கிரிப்டை பார்த்து தீர்ப்பு அளித்தது போல, திரைப்படத்தை பார்த்த ஆய்வுக் குழுவின் முடிவின் அடிப்படையில் நான் தீர்ப்பு அளிக்கிறேன்.

இனிமேல் தணிக்கை வாரியம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு வெட்டுக்கும் நீதிமன்றத்தை படத்தயாரிப்பாளர்கள் அணுகுவார்கள். இந்தத் தீர்ப்பு தயாரிப்பாளர்களுக்கு மிகவும் நல்லதாகும். ஏனெனில் நானும் தயாரிப்பாளராக இருந்தவன்.

நான் சட்டப்படியே என் பணிகளைச் செய்தேன். ஆனால் இன்றுமுதல் தயாரிப்பாளர்களால் நினைத்ததைப் படமாக்கும் சுதந்தரம் வந்துள்ளது. விரசமான, மோசமான காட்சிகளைப் படத்தில் இடம்பெறவைக்க அவர்களுக்குச் சுதந்தரம் கிடைத்துள்ளது.

இந்தச் சுதந்திரமான காலகட்டத்தில் அவர்கள் எப்படி படம் எடுத்தாலும் ஏ சான்றிதழுடன் படம் வெளியாக அனுமதி கிடைக்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, சர்ச்சைக்குரிய உத்தா பஞ்சாப் திரைப்படத்தை வெளியிட சினிமா தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →