Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Clash VS Justice Karnan & Court: Justice Karnan to observe fast in 4 cities

By   /  March 22, 2017  /  Comments Off on Clash VS Justice Karnan & Court: Justice Karnan to observe fast in 4 cities

    Print       Email

57680489நான்கு நகரங்களில் உண்ணாவிரதம் இருக்க நீதிபதி கர்ணன் முடிவு.

 

InCorpTaxAct
Suvidha

 

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை தெரிவித்தார். இதையடுத்து அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை நீதிபதி கர்ணன் வழக்காக எடுத்துக்கொண்டு அதற்கு தடை விதித்தார். இந்த பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த நிலையில் பிரதமர், சட்ட மந்திரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு நீதிபதி கர்ணன் புகார் கடிதங்கள் அனுப்பினார். அதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார்.

இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன் வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் புகார் தெரிவித்த நீதிபதி கர்ணன் மீது ஏன் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது? என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

2 முறை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் அதை ஏற்கவில்லை. இதனால் நீதிபதி கர்ணனுக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. அதேசமயம், தன்னை அவமதித்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக தனக்கு 14 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தன் மீதான நடவடிக்கைகளுக்கு எதிராக டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய நான்கு நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நீதிபதி கர்ணன் முடிவு செய்துள்ளார்.

டெல்லியில் அனுமதியைப் பொருத்து ஜனாதிபதி மாளிகை முன்போ அல்லது ராம் லீலா மைதானத்திலோ உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். இதபோல் சென்னையில் சட்டமன்றம் எதிரிலும், கொல்கத்தாவில் கவர்னர் மாளிகை எதிரிலும், லக்னோவில் பல்கலைக்கழகம் எதிரிலும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். ஆனால், போராட்ட தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பிடிவாரண்ட் உத்தரவை நிறைவேற்றும் காலக்கெடுவான மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுமா? அல்லது ஏப்ரல் மாதம் நடத்தப்படுமா? என்பதை நீதிபதி கர்ணன் இன்னும் முடிவு செய்யவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.

*

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →