உத்திரப்பிரதேச முதல்வராக ஷீலா தீட்சித் ;காங்கிரஸின் புதிய திட்டம்
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 403 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட அம்மாநிலத்தில் வெற்றி பெறுவதை அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன.
அம்மாநிலத்தில் 4 முனைப்போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய 3 கட்சிகளும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவான நிலையில் உள்ளன. இதனால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டது.
இந்நிலையில் மூன்று முறை டெல்லியின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
78 வயதாகும் ஷீலா தீட்சித், முன்னாள் மத்திய மந்திரி உமா சங்கர் தீட்சித்தின் மகள் ஆவார். ஷீலா தீட்சித் 1999 முதல் 2014-ம் ஆண்டு வரை டெல்லி முதல்-மந்திரியாக 15 ஆண்டுகள் இருந்துள்ளார். பிராமண வகுப்பைச் சேர்ந்த அவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். எனவே ஷீலா தீட்சித்தை முன் நிறுத்தி தேர்தலை சந்தித்தால் பிராமணர்கள் ஓட்டு தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
காங்கிரஸ் கட்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்தலுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.