பயிற்சியாளர் நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரித்துகொள்பவராக இருக்க வேண்டும் – தோணி
இந்திய கிரிக்கெட் அணிகான பயிற்சியாளர் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ள நிலையில் பல பயிற்சியாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் பெற்ற தோனி தன் கருத்தை இது குறித்து கூறியுள்ளார்.
லால்சந்த் ராஜ்புத், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன், டன்கன் பிளெட்சர், ஸ்டீபன் பிளெமிங், ரவிசாஸ்திரி என்று ஏகப்பட்ட பயிற்சியாளர்களுடன் சுமுகமாக பணியாற்றியுள்ள இந்திய கேப்டன் தோனி, புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஜிம்பாப்வே தொடருக்கு முந்தைய சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கம்யூனிகேஷன் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. புதிய வீரர்களிடத்தில் ஆங்கிலமும் பெரிய இடையூறாக இருந்ததில்லை. இந்தி தெரிந்திருப்பது ஒரு அளவுகோல்தான் ஆனால் அதுவே ஒரே அளவுகோல் அல்ல, மொழி ஒரு பிரச்சினையல்ல, நம் கிரிக்கெட் கலாச்சாரத்தை புரிந்து கொள்பவராக அவர் இருக்க வேண்டும். சிறந்தவரை தேர்வு செய்ய வேண்டும். சிறந்த தெரிவை மேற்கொள்ள வேண்டும், முக்கியமான விஷயம் என்னவெனில் நம் பண்பாட்டையும், திறமைகளை வளர்த்தெடுப்பதையும் புரிந்து கொள்பவர் யாராக இருந்தாலும் சரி ஆங்கிலம், இந்தி என்பதல்ல. இதற்கு முன்பாக நாம் சிறந்தவர் என்று கணித்தவர்கள் அனைவருமே நம் பண்பாட்டை புரிந்தவர்களாகவே இருந்துள்ளனர்”
என்று தெரிவித்தார் தோனி.
ஜிம்பாப்வே தொடர் குறித்து தோனி கூறும்போது, “ஜிம்பாப்வே அணி சில வேளைகளில் சவால்களை அளிக்கும் அணி என்பதில் சந்தேகமில்லை. பேட்டிங் ஆர்டரை அமைப்பதில் நம் சவால் உள்ளது. வேறுபட்ட பல வீரர்களுடன் ஆடுவது ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது.
நான் எனது ஆட்டத்தை மகிழ்வுடன் ஆடுகிறேன், கேப்டன்சி விவகாரங்களை பிசிசிஐ கவனித்துக் கொள்ளும்” என்று கோலி அனைத்து வடிவங்களுக்குமான கேப்டனாக்கப்பட வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியது குறித்த கேள்விக்கு தோனி பதிலளித்தார்.
ஏற்கெனவே தோனி, பயிற்சியாளர் பொறுப்பிற்கு மைக் ஹஸ்ஸியை பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஹஸ்ஸி அது குறித்த இறுதியான முடிவு எதையும் தெரிவிக்கவில்லை, தற்போது அவருடைய நிலைப்பாடு என்னவென்பதும் தெரியவில்லை.
சந்தீப் பாட்டீல், ரவிசாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர், அயல்நாட்டு விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் ஏதுமில்லை.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தினை புரிந்து கொள்பவராக இருப்பது முக்கியம் என்று தோனி கூறியுள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.