Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Concession affair in Sasikala’s jail: D.I.G Rupa gets threatening.

By   /  July 16, 2017  /  Comments Off on Concession affair in Sasikala’s jail: D.I.G Rupa gets threatening.

    Print       Email

சிறையில் சசிகலாவுக்கு சலுகை விவகாரம்: ஜெயில் அதிகாரி ரூபாவுக்கு கொலை மிரட்டல்

 

InCorpTaxAct

 

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் மற்றும் முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கிய தெல்கி ஆகியோருக்கு சிறப்பு சலுகைகளை வழங்க அதிகாரிகள் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதாக சிறைத் துறை டி.ஐ.ஜி. ரூபா கடந்த 3 நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜெயிலில் சசிகலாவுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் ரூபா கூறினார். இந்த லஞ்ச விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர் மட்ட விசாரணை குழு அமைத்து கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார்.

ஒரு வாரத்தில் இந்த லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கையும் ஒரு மாதத்தில் விரிவான அறிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை குழுவுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறைத் துறை உதவி ஐ.ஜி. வீரபத்திர சாமி பரப்பனஅக்ரஹார சிறையில் அதிரடி ஆய்வு செய்தார். சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு பெண் கண்காணிப்பாளர் அனிதாவுடன் சென்று பார்வையிட்டார்.

தெல்கி உள்பட வி.ஐ.பி.க் கள் அடைக்கப்படுள்ள கைதிகளின் அறை, சமையல் அறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் லஞ்ச புகாரில் சிக்கி உள்ள டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் நேற்று ஜெயிலுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் சசிகலா, தெல்கி ஆகியோரின் கோப்புகள், பார்வையாளர்களின் பதிவேடு, சி.சி.டி. கேமிராவில் பதிவான காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதற்கிடையே நேற்று மாலை டி.ஐ.ஜி. ரூபா திடீரென ஜெயிலுக்கு சென்று சசிகலாவின் அறை, சி,சி.டி.வி. வீடியோ அறை, மருத்துவமனை மற்றும் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் ஜெயில் அதிகாரி மீது லஞ்ச புகார் கூறிய டி.ஐ.ஜி. ரூபாவுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது பற்றி டிஐஜி ரூபா கூறியதாவது ; பெங்களூரு பரப்பன அக்ர ஹார சிறையில் அதிரடியாக 2 முறை சோதனை நடத்தினேன். சிறையின் அத்தனை இடங்களையும் அலசி ஆராய்ந்ததில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. அந்த தகவல்களை எனது உயர் அதிகாரியிடம் சொன்னேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த வாரம் எழுத்துப்பூர்வமாக அனுப்பினேன். அந்த கடிதம் எப்படியோ ஊடகங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

சசிகலாவுக்கு எந்த வசதியும், சலுகையும் அளிக்கப்படவில்லை என டி.ஜி.பி. சொல்வதற்கு பதில் அளிக்கவிரும்பவில்லை. நான் சிறையை நேரில் பார்வையிட்டு 2 அறிக்கைகளை கொடுத்திருக்கிறேன். அதன்படி விசாரணை நடக்கட்டும். யார் சொல்வது உண்மை என தெரியும்.

சசிகலா விவகாரத்தால் என் தொலைபேசிக்கும், சமூக வலைதள பக்கங்களுக்கும் சில மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அலுவலக ரீதியாக சில அழுத்தங்கள், நெருக்கடிகள் வரும் என நண்பர்கள் எச்சரிக்கிறார்கள். நான் எதையும் கண்டு அஞ்சமாட்டேன். ஓர் அதிகாரியாக இதையெல்லாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.

அதே நேரத்தில் முன்னாள் டி.ஜி.பி. கிரண்பேடி போன்ற மூத்த அதிகாரிகள் என்னை வாழ்த்துவது, மிகப் பெரிய உந்து சக்தியை கொடுத்திருக்கிறது. உயர் நிலைக்குழு எனது அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டால் சிறைத்துறையில் நல்ல மாற்றங்கள் வரும் என நம்புகிறேன்.

இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

Swapna
InCorpTaxAct
Centillion Networks
    Print       Email

You might also like...

AP will convert the drugs free state: Ganta Srinivasa Rao

Read More →