Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Confusion in BJP ‘projecting’ Jaya. ‘Don’t  blame Jaya’- Venkaiah Naidu advise to colleagues.

By   /  April 19, 2016  /  Comments Off on Confusion in BJP ‘projecting’ Jaya. ‘Don’t  blame Jaya’- Venkaiah Naidu advise to colleagues.

    Print       Email

13-1447402271-venkaiah-naidu-601மத்திய அமைச்சர்களிடேயே குழப்பம். ஜெயாவுக்கு ஆதரவா, எதிர்ப்பா? வெங்கய்ய நாயுடு, நிர்மலா சீத்தாராமன் ஆதரவு நிலைப்பாடு.

மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசிவருகிறார்கள். பியூஸ் கோயல், பொன்ராதாகிருஷ்ணன் உட்பட நான்கைந்து மத்திய அமைச்சர்கள் ஜெயலலிதாவை துறை ரீதியாகப் பேசுவதற்குக்கூட சந்திக்க முடியவில்லை என்று பேட்டியளித்த பிறகு வெங்கைய்யா நாயுடுவும் நிர்மலா சீத்தாராமனும் ‘நாங்கள் நினைத்தபோது சந்தித்துப் பேசியிருக்கிறோம்’ என்று அவர்கள் மந்திரிசபை சகாக்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இதே கருத்தை வெங்கைய்யா நாயுடு இரண்டாவது முறையாக பதிவு செய்திருக்கிறார்.

InCorpTaxAct
Suvidha

சென்னை வந்த மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்னும் தொடங்கவில்லை. பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இறுதி பட்டியல் வெளியிட்ட பிறகு பிரசாரத்துக்கு நான் வருவேன். அப்போது தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவேன்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்று சில மத்திய மந்திரிகள் கூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவது சகஜம். அந்த அமைச்சர் தனது துறை ரீதியாக சந்திக்க முடியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து இருக்கலாம். மத்திய–மாநில அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்யத்தான் இருக்கிறார்கள். எனவே ஒருவருக்கொருவர் குறை கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் நடப்பது சட்டமன்ற தேர்தல். பாராளுமன்ற தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் தான் நாடு முழுவதும் மோடி அலை வீசியது.

இது சட்டசபை தேர்தல் மோடியும் போட்டியிடவில்லை. மோடி புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் தங்களை மதசார்பற்ற கட்சி என்று கூறி வருகிறது. ஆனால் அவர்கள் வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ், இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளது. ஆனால் கேரளாவில் எதிர் எதிர் அணியில் உள்ளது. இதனை மக்கள் நன்கு அறிவார்கள் கேரளாவில் பாரதீய ஜனதா வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →