Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Confusion in seat sharing PWF postpones list.

By   /  April 14, 2016  /  Comments Off on Confusion in seat sharing PWF postpones list.

    Print       Email

maxresdefault (13)மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, தமாக தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்; வேட்பாளர் பட்டியல் வெளியீடு தள்ளிப்போகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தலைமையில் 5 முனை போட்டி நிலவுகிறது.

InCorpTaxAct
Suvidha

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்– அமைச் சருமான ஜெயலலிதா எப்போதும் போல முன் கூட்டியே வேட்பாளர் பட்டி யலை அறிவித்து விட்டு தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார்.

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். 23–ந்தேதி முதல் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

தனித்து போட்டியிடும் பா.ம.க. 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள் ளது. பா.ஜ.க.வும் ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்து தொகுதி பங்கீடு செய்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

ஆனால் 6 கட்சிகள் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணியில் இன்னும் தொகுதிகள் பிரித்து அறிவிக்கப்பட வில்லை.

இந்த கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. 104 தொகுதியிலும், ம.தி.மு.க. 29 தொகுதியிலும் த.மா.கா. 26 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 25, இந்திய கம்யூனிஸ்டு 25 தொகுதிகளிலும் களம் இறங்குகின் றன.

6 கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி 3 நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இரவு பகலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், தே.மு.தி.க. சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளை கூட்டணிக்குள் உள்ள 6 கட்சிகளும் பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரித்து கொள்வதில் இழுபறி நீடித்தது.

இந்த பேச்சுவார்த்தையில் நேற்று பெரும்பாலான தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஒரு சில தொகுதிகளில் மட்டும் சிக்கல் நீடித்ததால் நேற்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதி உடன்பாடு பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொகுதி பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே 40 தொகுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.

கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தொகுதிகளை அறிவிக்காத நிலையில் விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள் ளது.

மக்கள் நலக்கூட்டணி கட்சிகளும், த.மா.கா.வும் இன்று தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்கின்றன. விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னிஸ்டு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு பட்டியல் தயாராகி விட்டன.

ஆனால் ம.தி.மு.க., த.மா.கா. போட்டியிடும் ஒன்று இரண்டு தொகுதிகளில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. அதனால் இன்று காலையில் மீண்டும் தே.மு.தி.க. அலுவலகத்தில் ம.தி.மு.க., த.மா.கா. நிர்வாகிகள் தே.மு.தி.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார்கள். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 17–ந்தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று தொல்.திருமாவளவன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். த.மா.கா. பட்டியல் 4 நாட்களில் வெளியிடப்படும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரு சில நாட்களில் தங்களுககு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்கின்றன.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →