Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Congress attacks Modi on his defence of Raghuram Rajan . Says ‘It shows his second face’

By   /  June 28, 2016  /  Comments Off on Congress attacks Modi on his defence of Raghuram Rajan . Says ‘It shows his second face’

    Print       Email

Sibalரகுராம் ராஜனுக்கு ஆதரவாக மோடி இப்போது பேசுவது மோடியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது –காங்கிரஸ் கடும் கண்டனம்.

மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ராகுராஜன் மீது நாட்டுப்பற்று உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை பாரதீய ஜனதா மூத்த தலைவரும், எம்.பி-யுமான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து கூறி வந்தார்.

InCorpTaxAct
Suvidha

ஆளுநர் பதவியை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வந்த நிலையில், ரகுராம் ராஜனுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியை வகிக்க தமக்கு விருப்பமில்லை என்று ரகுராஜன் கூறிவிட்டார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் ரகுராஜன் மீதான விமர்சனம் குறித்து நேற்று மோடி முதன் முறையாக பேசினார்.

அப்போது, ரகுராஜன் தேசப்பற்றில் குறைந்தவர் அல்ல என்றும் விளம்பரத்திற்காக யாரும் செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ரகுராம் ராஜன் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தாமதமாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், இரட்டை முக அரசியலை செய்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியும், செய்தி தொடர்பாளருமான கபில் சிபில் கூறியுள்ளதாவது:-

பதவியை நீட்டித்துக் கொள்ள விருப்பம் இல்லை என ரகுராம் ராஜன் அறிவித்த பிறகு மோடி தற்போது பேசியுள்ளது அர்த்தமற்றது.

ரகுராம் ராஜனை இன்று பாதுகாப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இது இரட்டை முக அரசியல் தான். தன்னுடைய கட்சி எம்.பி-யால் ரகுராம் ராஜன் தாக்கப்பட்டு வந்த போது மோடி மவுனமாக இருந்தார்.

இது மிகவும் தந்திரமான செயல். ஆளுநர் பதவியில் அவர் நீடிப்பதில் உங்களுக்கு விருப்பமில்லை. அவர் நேரடியான செய்தியாளர் சந்திப்பில் பேசாமல், தொலைக்காட்சி பேட்டியில் விளக்கமளித்துள்ளார்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →