காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு; விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம், சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அறிவிப்பு.
மாநில தலைவர் இளங்கோவன் தலைமையில் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய செயலாளர் கே.வி.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள்
தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், சிவராமன், கவுன்சிலர் தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* பிரீ கே.ஜி. முதல் பி.ஜி. வரை அனைத்து மாணவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இலவசக் கல்வி வழங்கப்படும்.
* கல்வி வணிகமயமாக்குவது தடுக்கப்படும். தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்டந்தோறும் நவோ தயா பள்ளிகள் தொடங்கப்படும்.
* கல்வித்துறைக்கான ஒதுக்கீடு உயர்த்தப்படும். மொழி சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையில் அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வகுப்புகள் தொடங்கப்படும்.
* தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம், நன்கொடை வசூலிப்பது தடைசெய்யப்படும். உயர் கல்வியை உலகத்தரத்திற்கு ஈடாக மாற்றி அமைக்கப்படும்.
* ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ஈடாகத் தமிழகத்தில் தரம் உயர்ந்த கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
* தொழில் தொடங்க ஒற்றைச் சாரள முறையில் அனுமதி வழங்கப்படும். சிறு, குறு தொழில்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
-* கூவம் சீரமைப்புத் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும்.
* மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* நடிகர் திலகம் சிவாஜி பிறந்த நாளான அக்டோபர் 1-ந்தேதியைக் கலை எழுச்சி நாளாகக் கொண்டாட ஆவன செய்யப்படும். சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டப்படும்.
* சென்னைக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை நீதிமன்ற ஆணையின்படி காந்தியடிகள் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் இடையில் அமைக்க ஆவன செய்யப்படும்.
* தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம். சென்னைத் துறைமுகம் மதுரவாயல் 19 கி.மீ. உயர்மட்டச் சாலைத் திட்டத்தை மீண்டும் தொடங்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
* அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் செயல்படாமல் முடக்கப்பட்ட நிலையிலிருந்து மீட்டு, சர்வதேச தரத்தில் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
என்றும் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.