Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Congress’ Organizational Structure no match for BJP & RSS:  P Chidambaram

By   /  March 20, 2017  /  Comments Off on Congress’ Organizational Structure no match for BJP & RSS:  P Chidambaram

    Print       Email

பா.ஜ.க அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு  இல்லை – ப.சிதம்பரம்chidambram-759

 

InCorpTaxAct
Suvidha

 

பா.ஜ.க. அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு இல்லையென முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்புக்கு இணையாக இல்லை. பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்பால், மக்களிடம் சிறப்பான முறையில் பிரசாரம் செய்து, அதிக ஓட்டுகளை பெற முடிகிறது. இருப்பினும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான, அ.தி.மு.க. ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், பா.ஜ.க.  ஆர்.எஸ்.எஸ்., கட்டமைப்பு சிறப்பானதாக இல்லை.

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் கிடைத்த வெற்றி, செல்லாத நோட்டு திட்டத்துக்கு ஆதரவாக கிடைத்ததல்ல. இந்தியாவில், தேசிய அளவிலான தேர்தல் என்பது, 29 மாநிலங்களின் தொகுப்புக்கு நடக்கும் தேர்தல். இது, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறும். ஒவ்வொரு தேர்தல் முடிவும், அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்பவே அமைகிறது.

உத்தரப்பிரதேசத்தில் கிடைத்த வெற்றி, செல்லாத நோட்டு திட்டத்துக்கு கிடைத்தது என, சிலர் சொல்கின்றனர். அப்படி பார்த்தால், பஞ்சாபில், பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி, செல்லாத நோட்டு திட்டத்துக்கு எதிரானதாக கருதலாமா? அப்படி நினைப்பது, மோசமான முடிவாக இருக்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப, தேர்தல் வியூகத்தை வகுப்பது, 29 மடங்கு கடினமான செயல். தேசிய அளவில் தேர்தலை சந்திக்க, 29 வகையான வியூகங்களை அமைக்க வேண்டும் என, எங்கள் கட்சி தலைமையிடம் நான் கூறியுள்ளேன். தற்போதைய அரசியலில், எதிர் குரல் எழுப்ப வாய்ப்பு குறைந்து வருகிறது. தலித், சிறுபான்மையினர், என்.ஜி.ஓ.,க்கள் என அனைவரும், பயத்தில் வாழ்கின்றனர்.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் டெரிக்.ஓ.பிரையன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →